in

புதிய வழித்தடத்தில் பேருந்து சேவைகளை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

சிதம்பரத்திலிருந்து குமராட்சி, கீழவன்னியூர் அரசு கல்லூரி வழியாக காட்டுமன்னார்கோயிலுக்கு அரசு பேருந்து. புதிய வழித்தடத்தில் 2 பேருந்துகளின் சேவைகளை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

சீமான் பேசுவது பைத்தியக்காரத்தனமான பேச்சாக இருப்பதாகவும், அவர் பைத்தியம் எனவும் அமைச்சர் பன்னீர்செல்வம் விமர்சனம். விவசாயிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக முதலமைச்சர் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஒன்றிய அரசுக்கு தெரிவித்து, மத்திய குழு நேரில் பார்வையிட்டு உள்ளதாக பேட்டி

சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வழித்தடத்தில் 2 புதிய பேருந்துகளின் சேவை இன்று தொடங்கப்பட்டது. சிதம்பரத்திலிருந்து குமராட்சி, கீழவண்ணியூர் அரசு கலைக்கல்லூரி வழியாக காட்டுமன்னார்கோயிலுக்கு செல்லும் இரண்டு பேருந்துகளின் சேவை துவக்க விழா சிதம்பரம் பஸ் நிலையத்தில் நடைபெற்றது.

இதில் தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் பங்கேற்று கொடியசைத்து பேருந்து சேவைகளை துவக்கி வைத்தார். இந்த பேருந்தில் கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் சென்றனர். பின்னர் சிதம்பரம் பஸ் நிலையத்தில் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது.

குமராட்சியிலிருந்து உள் பகுதியில் அரசு கல்லூரி கட்டப்பட்டிருக்கிறது. பேருந்து சொல்லாத இந்த வழித்தடத்தில் புதிய பேருந்துகளின் சேவைகளை துவக்கி வைத்துள்ளேன். சீமானை விட்டு ஒதுக்கப்படுகின்ற அளவிற்கு அவரது கட்சியில் தொண்டர்கள் இருக்கிறார்கள். தொண்டர்களை அரவணைத்து கட்சி நடத்த வேண்டும். திமுக ஆட்சியில் இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் தொண்டர்களை அரவணைத்து செல்லும் இயக்கம்.

வாழ்வு வரும்போது தொண்டர்களை அரவணைக்கின்ற இயக்கம் திமுக. சீமான் பேசுவது பைத்தியக்காரத்தனமான பேச்சாக இருக்கிறது. உளறல்களுக்கெல்லாம் பதில் சொல்ல விரும்பவில்லை. அவரை பைத்தியம் எனக் கூறலாம். நடிகராக இருந்து பரிமாணிக்க முடியாததால் அரசியல் போர்வை போர்த்திக் கொண்டு வருகிறார்கள். தெற்கும் வாழ்கின்ற நிலையை உருவாக்கியது திராவிட இயக்கம்.

திமுக ஆட்சியில் மாணவர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் முன்னேறியுள்ளனர். நடிப்புத் துறையிலும், சினிமா துறையிலும் ஒதுக்கப்பட்டு கட்சி ஆரம்பித்திருக்கிறார். மக்கள் பாதிப்பு அடைகின்ற நேரத்தில் உறுதுணையாக இருப்பவர்தான் முதலமைச்சர்.

காலநிலை மாற்றத்தால் பெய்த மழையால் பயிர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறது. அதனால் விவசாயிகள் பாதிக்கப்படக் கூடாதுது என்பதற்காக ஈரப்பதம் குறித்து மத்திய அரசுக்கு அறிவித்து, மத்திய குழுவினர் நேற்று வந்து ஆய்வு செய்து இருக்கிறார்கள். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களையும் அதிகாரிகள் ஆய்வு செய்து இருக்கிறார்கள். 23 சதவீதம் வரை ஈரப்பதம் இருப்பதை கண்டறிந்திருக்கிறார்கள். அந்த அறிக்கையை ஒரு சில நாட்களில் ஒன்றிய அரசிடம் சமர்ப்பிக்கிறார்கள். அதன் பிறகு முழு விபரம் தெரியும் என கூறினார்.

What do you think?

மொழிப்போராட்ட தியாகிகளை நினைவு கூறும் வீரவணக்க நாள் நிகழ்ச்சி.

செஞ்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியரசு தின விழா