in

பிரதமர் குறித்த கேள்விக்கு அவரிடம் போய் கேளுங்கள் என அமைச்சர் நேரு பேட்டி


Watch – YouTube Click

பிரதமர் குறித்த கேள்விக்கு அவரிடம் போய் கேளுங்கள் என அமைச்சர் நேரு பேட்டி

 

எம்ஜிஆர் ஜெயலலிதா பற்றி பேசிய பிரதமர் குறித்த கேள்விக்கு அவரிடம் போய் கேளுங்கள் என அமைச்சர் நேரு பேட்டி

திருச்சியில் மத்திய பஸ் நிலையம் அருகே பெரும்பிடுகு முத்தரையர் மணிமண்டபம், தியாகராஜ பாகவதர் மணிமண்டபம் முக்கொம்பு காவிரி பாசன வாய்க்காலில் கதவனை ஆகியவற்றை முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதற்கான விழாவில் அமைச்சர்கள் நேரு, மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பங்கேற்றனர்.

இதுகுறித்து அமைச்சர் நேரு செய்தியாளர்களிடம் கூறியதாவது..
திமுக ஆட்சியில் முத்தரையருக்கும், தியாகராஜ பாகவதருக்கும் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்பது முதல்வர் ஸ்டாலின் ஆசை. அதை நிறைவேற்றி இன்று நடந்த திறப்பு விழாவில் எங்களை கலந்து கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார்.

அதன்படி நாங்கள் பங்கேற்று மரியாதை செலுத்தியுள்ளோம். இதன் மூலம், அனைத்து மக்களுக்குமான அரசு என்பது நிரூபணம் ஆகி உள்ளது. ஸ்ரீரங்கம் காவிரி பாலம் கட்டுவதற்கு அரசு ஆணையிட்டுள்ளது.

விரைவில் டெண்டர் விட்டு பணிகள் துவங்கும். கிளாபாக்கம் பஸ் நிலையம் பற்றி விமர்சனங்கள் வந்தன. அதனால் அது போன்ற விமர்சனங்கள் வந்து விடக்கூடாது என்பதற்காக முழுமையாக பணிகள் முடிந்த பிறகு திருச்சியில் பஞ்சப்பூர் பஸ் ஸ்டாண்ட் திறக்கப்படும்.

தற்போது, கோயம்பேடு பஸ் ஸ்டாண்டை விட கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட் நன்றாக உள்ளது. தமிழகத்தில் எம்ஜிஆருக்கு பிறகு ஜெயலலிதா தான் நன்றாக ஆட்சி செய்தார், என்று பிரதமர் மோடி கூறியது பற்றி அவரிடம் தான் கேட்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் நேரு தெரிவித்தார்.


Watch – YouTube Click

What do you think?

மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தலைமையில் நடைபெற்ற நார்கோ ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம்

நான் பாஜக செல்வேன் என கூறியவனை செருப்பால்…. திருச்சி எம்பி கோபத்துடன் பேட்டி