தஞ்சையில் சுகாதார மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் பேட்டி
ஒரே ஆண்டில் பிரசவத்தின் போது ஏற்படும் இறப்பு விகிதம் 9% குறைந்துள்ளது, பணி நியமனம் தொடர்பாக நீதிமன்றம் செல்லும் முன்பு வழக்கு போட்டவர்கள் வந்தால் பேசி தீர்க்க தயாராக உள்ளோம் தஞ்சையில் சுகாதார மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் பேட்டி.
தஞ்சையில் மூன்றாவது சர்வதேச பொது சுகாதார மாநாட்டினை முன்னிட்டு பல்வேறு துறைகள் சார்பில் நடைபெற்ற பேரணியை தொடங்கி வைத்த மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுபிரமணியன் இரு கிலோ மீட்டர் நடந்தே சென்று மாநாடு நடைபெறும் திருமண மண்டபத்திற்கு வந்தடைந்தார்.
மாநாட்டினை தொடங்கி வைத்த அவர் இரண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான பணி நியமன ஆணையை வழங்கினார். மாநாட்டு மலரையும் வெளியிட்டார் பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் கடந்த ஆண்டை விட பிரசவத்தின் போது ஏற்படும் இறப்பு விகிதம் 9 சதவீதம் குறைந்துள்ளது. மகப்பேறு இறப்பு இல்லாத மாவட்டமாக விருதுநகர் மாறி உள்ளது. அரசு மருத்துவமனையில் ஒரே ஊசியை பயன்படுத்திய பணியாளரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இது அனைவருக்குமான படமாக அமையும். தமிழகத்தில் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடு இல்லை. தமிழகத்தில் தான் அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவ கிடங்கு உள்ளது.
6 மாவட்டங்களில் இல்லாமல் இருந்தது. 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அங்கும் மருத்துவ கிடங்கு அமைக்கப்பட்டு வருகிறது. அனைத்து மருத்துவ கிடங்குகளிலும் அடிப்படை தேவையான மருந்துகள் கையிருப்பு உள்ளதை நுாறு சதவீதம் உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு மூலம் 545 விருதுகளை நமது சுகாதாரத்துறை பெற்றுள்ளது. சுகாதார ஆய்வாளர் 1,066 பேர், கிராம சுகாதார செவிலியர்கள் 2,253 பேர் மற்றும் டாக்டர்கள் 2,550 பேருக்கான பணி நியமனம் தொடர்பான பணிகள் துவங்கப்பட்டுள்ளன.
சுகாதார ஆய்வாளர் பணிகள் தொடர்பாக 38 வழக்குகள் உள்ளது. கிராம சுகாதார செவிலியர்கள் பணிகள் தொடர்பாக 30க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. வழக்குகள் போடும் நபர்கள் அரசிடம் வருங்கள் பேசி தீர்வு காண்போம் எனவும் தெரிவித்தார்.