in

நலத்திட்ட உதவிகளை உயர்கல்வி துறை அமைச்சர் கோ.வி.செழியன் வழங்கினார்

நலத்திட்ட உதவிகளை உயர்கல்வி துறை அமைச்சர் கோ.வி.செழியன் வழங்கினார்

 

அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு, தஞ்சை மாவட்டத்தில் 2284 பயனாளிகளுக்கு 17 கோடியே 34 லட்சத்து 94 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை உயர்கல்வி துறை அமைச்சர் கோ.வி.செழியன் வழங்கினார்.

அம்பேத்கர் நினை நாளை முன்னிட்டு, ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

சென்னையில் முதலமைச்சர் காணொளி வாயிலாக துவங்கி வைத்ததை தொடர்ந்து, தஞ்சை அண்ணா நூற்றாண்டு அரங்கில் நடந்த நிகழ்வில்

தாட்கோ, பேரிடர் மேலான்மை துறை, தோட்டக்கலை துறை, வருவாய் துறை, பழங்குடியினர் உள்ளிட்ட துறை சார்பில் 2284 பயனாளிகளுக்கு 17 கோடியே 34 லட்சத்து 94 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை உயர்கல்வி துறை அமைச்சர் கோ.வி.செழியன் வழங்கினார்.

இந்நிகழ்வில். நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மேயர், துணை மேயர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

What do you think?

தமிழக அளவில் 47வது இடத்தில் முன்னேறி இருக்கிறோம், அமைச்சர் கோவி.செழியன் தகவல்

பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6 இன்று எஸ்டிபிஐ கட்சி நெல்லை மாநகர் மாவட்டம் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்