கிரிவலப் பாதையை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்ட பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு…
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள வறட்டு குளங்களை 1000 த்திற்க்கும் மேற்பட்ட தூய்மை காவலர்களுடன் மஞ்சள் ஆடை அணிந்து தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்ட பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு…
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் கிரிவலப் பாதையில் பல்வேறு புண்ணிய தீர்த்தங்களும் குளங்களும் உள்ளன.
கடந்த சில ஆண்டுகளாகவே திருவண்ணாமலையில் நகரை தூய்மைப்படுத்தும் விதமாக தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சரும், தூய்மை அருணை ஒருங்கிணைப்பாளருமான எ.வ.வேலு தூய்மை அருணை பெயரில் ஓர் இயக்கத்தை தொடங்கி ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மை அருணை காவலர்களை கொண்டு தற்பொழுது வரை திருவண்ணாமலை மாநகரம் மட்டுமின்றி கிரிவலப் பாதை, மாட வீதி உள்ளிட்ட அனைத்து இடங்களையும் தினந்தோறும்,வாரந்தோறும் தொடர்ந்து கால்வாயை தூய்மைப்படுத்துதல், சாலைகளை சுத்தம் செய்து வருவதோடு ஆங்காங்கே பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை நட்டும் பராமரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகத்தோடு தூய்மை அருணை இயக்கமும் இணைந்து கிரிவலப் பாதையில் அமைந்துள்ள வறட்டு குளங்களை (பயன்படாத குளங்களை) கண்டறிந்து முழுமையாக தூய்மைப்படுத்தும் பணியில் அமைச்சர் எ.வ.வேலு ஈடுபட்டார்.
இதற்காக அதிகாலையிலேயே மஞ்சள் நிற ஆடை அணிந்து கிரிவலப் பாதைக்கு வந்த அவர் வரட்டு குளங்களை தூய்மைப்படுத்துவதோடு குளங்களுக்கு வரும் நீர் வழிப் பாதைகளை கண்டறிந்து அதனையும் தூய்மைப்படுத்தினார்.
தொடர்ந்து கிரிவலப் பாதையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மை காவலர்களுடன் இணைந்து அனைத்து வறட்டு குளங்களையும் தூய்மைப்படுத்த அறிவுரைகளையும் வழங்கினார்.
இந்த தூய்மை பணியில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உள்ளிட்ட ஏராளமான தூய்மை காவலர்கள் கலந்து கொண்டு தூய்மை பணியில் ஈடுபட்டனர்.