வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்
சாத்தூர் நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை அடிக்கல் நாட்டி,பூமி பூஜை செய்து துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமை வகித்தார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை அமைச்சர் கே.கே.எஸ் எஸ்.ஆர் ராமச்சந்திரன் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர் ரகுராமன் ஆகியோர் கலந்து கொண்டு சாத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 4-வார்டு பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நகராட்சி பூங்காவை திறந்து வைத்தனர்.
பின்னர் சாத்தூர் 9-வது வார்டு பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்,10-வது வார்டு பகுதியில் புதிய அரசு ஆரம்ப பள்ளி புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டு பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.மேலும் முக்குராந்தல் பகுதியில் புதிய சாலை அமைக்கும் பணியையும் அடிக்கல் நாட்டி பணிகளை அமைச்சர் துவக்கி வைத்தார்.
இதேபோன்று சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட என்.சுப்பையாபுரம் கிராமத்தில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை திறந்து வைத்தார். மேலும் அருகில் உள்ள கரிசல்பட்டி கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டிடம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டி பூமி பூஜை செய்து பணிகளையும் அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் துவக்கி வைத்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் சாத்தூர் நகர மன்ற தலைவர், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் நிர்மலா கடற்கரைராஜ், திமுக ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகளும், வருவாய் துறை அதிகாரிகளும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.