in

தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அமைச்சர் ரகுபதி பேச்சு

தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அமைச்சர் ரகுபதி பேச்சு

 

தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருவதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேச்சு.

நாகப்பட்டினம் அடுத்த அக்கரைப்பேட்டை ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் சுமார் ரூபாய் 1 கோடியே 92 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய கூட திறப்பு விழா நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தலைமையிலும் தமிழக மீன் வளர்ச்சி கழகத்தின் தலைவர் கௌதமன், நாகை பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் முன்னிலையிலும் நடைப்பெற்ற இந்நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பங்கேற்று கட்டிடத்தை திறந்து வைத்து பேசிய அமைச்சர் ரகுபதி.

தமிழக மீனவர்கள் மீது மிகுந்த அக்கறை கொண்ட அரசாக திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருவதாகவும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வருவதாகவும் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி,நாகை நகர மன்ற தலைவர் இரா.மாரிமுத்து உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

What do you think?

மதுரையில் புதிய பூணூல் அணியும் விழா நடைபெற்றது

20 வருஷமாக கிடப்பில் போடப்பட்ட விவசாயின் மனு, மனுவுக்கு தேங்காய், பழம், பத்தி வைத்து நூதன வழிபாடு