மக்களால் புறக்கணிக்கப்பட்டவர், அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் என அமைச்சர் சாய் சரவணன் பேட்டி
புதுச்சேரியில் மக்களால் புறக்கணிக்கப்பட்டவர், அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் நிர்வாகத்தை பற்றி அவருக்கு என்ன தெரியும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 எம்.எல்.ஏ., க்கள் உள்ளனர். அவர்கள் சட்டசபையில் கேள்வி எழுப்பினால் பதில் அளிக்க தயாராக உள்ளேன் என அமைச்சர் சாய் சரவணன் பேட்டி..
புதுச்சேரி தீயணைப்புத்துறை சார்பில் திருக்கனூர் தீயணைப்பு நிலையத்தில் ஊழியர்களுக்கான குடியிருப்பு கட்டடங்கள் ரூ. 21 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது.
விழாவில் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் உள்துறை அமைச்சருமான நமச்சிவாயம், தீயணைப்பு துறை அமைச்சர் சாய் சரவணன்குமார் ஆகியோர் கலந்து கொண்டு ஊழியர்கள் குடியிருப்புகளை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
விழாவில், தீயணைப்பு துறை அரசு செயலர் கேசவன், அரசு சார்பு செயலர் ஹிரண், மண்ணாடிபட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில் ராஜன் மற்றும் பொதுப்பணித்துறை, தீயணைப்புத்துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் சாய் சரவணகுமாரிடம் புதுச்சேரியில் 15000 பெற்றுக் கொண்டுதான் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் குற்றச்சாட்டிள்ளது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அமைச்சர் சாய்சரவணக்குமார் அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் மக்களால் புறக்கணிக்கப்பட்டவர், நிர்வாகத்தை பற்றி அவருக்கு என்ன தெரியும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 எம்.எல்.ஏ., க்கள் உள்ளனர். அவர்கள் சட்டசபையில் கேள்வி எழுப்பினால் பதில் அளிக்க தயாராக உள்ளேன் என்றார்.