in

செஞ்சிக் கோட்டை புதிய தார்சாலை அமைக்க அமைச்சர் செஞ்சி மஸ்தான் பணியை தொடங்கி வைத்தார்.

செஞ்சிக் கோட்டை சாலைகளை புதுப்பிக்க 1 கோடியே 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய தார்சாலை அமைக்க அமைச்சர் செஞ்சி மஸ்தான் பணியை தொடங்கி வைத்தார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கோட்டை வரலாற்று சுற்றுலாத்தலமாக உள்ள நிலையில் இக்கோட்டையை கான உள்நாட்டு சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் நாள்தோறும் செஞ்சி கோட்டைக்கு வருகை தந்து பண்டைய கால மன்னர்களின் கட்டிடக்கலையினை கண்டு ரசித்து வருகின்றனர்.

இந்நிலையில்.தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோட்டையில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை மேம்படுத்திட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்த நிலையில் நகர்ப்புற சாலை மேம்பாட்டு நிதித் திட்டத்தின் கீழ் 1 கோடியே 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைப்பதற்கு சிறுபான்மையினர் நலன் அமைச்சர் செஞ்சி மஸ்தான் புதிய சாலை அமைப்பதற்கான பணியை துவக்கி வைத்தார்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செஞ்சி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ஆர். விஜயகுமார், மாவட்ட கவுன்சிலர் அரங்க. ஏழுமலை,செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான், துணைத் தலைவர் ராஜலட்சுமி செயல்மணி ,மேல்மலையனூர் ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், பேரூராட்சி செயல் அலுவலர் அண்ணாதுரை,செஞ்சி தாசில்தார் ஏழுமலை, பேரூராட்சி கவுன்சிலர்கள்,பொதுக்குழு உறுப்பினர் மணிவண்ணன்,தொல்லியல் துறை உதவி பொறியாளர் ஈஸ்வரன், கோட்டை பராமரிப்பு அலுவலர் முகமது இஸ்மாயில், மற்றும் பல்வேறு அரசு அதிகாரிகள், அரசு பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

What do you think?

செஞ்சி சந்தை மேடு ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேக திருக்குட நன்னீராட்டு பெருவிழா

மேல்மலையனூர் ஒன்றியம் வளத்தி ஊராட்சியில் உள்ள தண்டு மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா