செஞ்சி ,மயிலம், திண்டிவனம் ஆகிய தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நீண்ட வரிசையில் நின்று ஆண்களும் பெண்களும் தங்களது வாக்கினை பதிவு செய்தனர் – செஞ்சி புனித மிக்க மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் தனது வாக்கினை பதிவு செய்து ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்……
முதலமைச்சரின் 3 ஆண்டு கால சாதனைகளையும் பிரதமர் மோடியின் பத்தாண்டு கால வேதனைகளையும் மக்கள் ஒருங்கிணைத்து பார்த்துஇந்தியா கூட்டணிக்கு நல்ல தீர்ப்பை அளித்து வருகின்றனர்என அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார்
விழுப்புரம் வடக்கு மாவட்டம் செஞ்சி, மயிலம், திண்டிவனம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் வாக்குப்பதிவுகள் இன்று விறுவிறுப்பாக நடைபெற்றது. அந்த வகையில் ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்தியா கூட்டணியின் வெற்றி வேட்பாளர் தரணி வேந்தனை ஆதரித்துசெஞ்சி, மயிலம் ஆகிய தொகுதிகளில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் உதயசூரியன் சின்னத்திற்கும் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் துரை ரவிக் குமாரை ஆதரித்து பானைசின்னத்திற்கு திண்டிவனம் தொகுதியில் தீவிரபிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக இன்று நாடாளுமன்றத் தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கியது விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தொகுதியில் 304 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுவாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான மின்னணு இயந்திரங்கள் வாக்குப்பதிவுக்கு தேவையான அனைத்து பொருட்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று அனுப்பி வைக்கப்பட்டன.
இன்று காலையில் 7:00 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாகவும் அமைதியாகவும் நடைபெற்றது.செஞ்சி புனித மிக்கேல் மேல்நிலைப்பள்ளி அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், மனைவி சைதானி பீமஸ்தான்,செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் அலி மஸ்தான்ஆகியோர் வரிசையில் நின்று வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.
வாக்களித்த பின் செய்தியாளர்களைசந்தித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான்:
பாசிச ஆட்சியை அகற்றி ஜனநாயக ஆட்சியை நிலைநாட்டுவதற்காகஇந்திய கூட்டணிக்கு அனைத்து மக்களும் வாக்களிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சியின் சாதனைகளும் பத்தாண்டு காலம் மோடியின் வேதனைகளும் மக்கள் ஒருங்கிணைத்து பார்க்கின்றநோக்கத்தில் நல்ல தீர்ப்பினை அளிக்கின்ற நாளாக இன்று கருதுகின்றனர். வாக்காளர்கள் மகிழ்ச்சியோடு திமுக கூட்டணிக்கு வாக்களிக்கும் நிலை காண முடிகிறது. இந்தியா கூட்டணி திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என அவர் தெரிவித்தார்.
இதேபோல் செஞ்சி ஒன்றியம் அங்கராயநல்லூர் ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் செஞ்சி ஒன்றிய பெருந்தலைவர் விஜயகுமார் தனது வாக்கினை பதிவு செய்து ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.
தொடர்ந்து செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் துணைத் தலைவரும் ஆலம்பூண்டி ஸ்ரீ ரங்க பூபதி கல்லூரி குழுமத்தின் தாளாளர் ரங்கபூபதி தனது வாக்கினை பதிவு செய்தார்.
மயிலம் தொகுதி வல்லம் ஒன்றியம் பெரும்பகை ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் ஒன்றிய பெருந்தலைவர் அமுதா ரவிக்குமார்தனது வாக்கினை பதிவு செய்தார்.
இதேபோல் மேல்மலையனூர் ஒன்றிய பெருந்தலைவர் கண்மணி நெடுஞ்செழியன் வளத்தியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் தனது வாக்கினை பதிவு செய்தார். மயிலம் ஒன்றியம் வெங்கத்தூர் ஊராட்சிதொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் மயிலம் ஒன்றிய பெருந்தலைவர் யோகேஸ்வரி மணிமாறன் தனது வாக்கினை பதிவு செய்தார்.
மயிலம் தொகுதியில் 265வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு அமைதியான முறையில் வாக்கு பதிவுகள் நடைபெற்றது.
இதேபோல் திண்டிவனம் சட்டமன்ற தொகுதியில் 257 வாக்கு சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு அமைதியாயமான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றன.வாக்கு சாவடி மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு பதிவுகள் நடைபெற்றது.