in

குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோவில் திருப்பணி பணிகளை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்

குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோவில் திருப்பணி பணிகளை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்

 

முசிறி அருகே குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோவில் திருப்பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்

திருச்சி மாவட்டம், முசிறி அருகே குணசீலம் அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோவில் தென் திருப்பதி என பக்தர்களால் அழைக்கப்படுகிறது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்தகோவிலில் திருப்பணி தொடக்கம், பசுமாடம் துவக்கம் மற்றும் காணிக்கையாக வரப்பெற்ற தங்க நகைகளை ஒப்படைத்தல் உள்ளிட்ட பணிகளை தொடங்கி வைப்பதற்காக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேரில் வருகை தந்தார்.

அப்போது 22 கோடி மதிப்பீட்டிலான புதிய திருப்பணிகளை தொடங்கி வைத்தும், ரூ 26.50 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள பசு மடத்தினை திறந்து வைத்தும், திருக்கோவிலுக்கு காணிக்கையாக வரப்பெற்ற பலமாற்று பொன் இனங்களில் திருக்கோயிலுக்கு பயன்படுத்த இயலாத 12 கிலோ 595 கிராம் பொன் இனங்களை சுத்த தங்கமாக மாற்றி தங்க முதலீட்டு பத்திரத்தில் முதலீடு செய்யும் வகையில் பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிடம் அமைச்சர் சேகர்பாபு ஒப்படைத்தார். முன்னதாக கோவில் சார்பில் அமைச்சர் சேகர்பாபுவிற்க்கு பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்குமார், கூடுதல் ஆணையர் சுகுமார், இணை ஆணையர் (சரிபார்ப்பு) வான்மதி, கோவில் பரம்பரை டிரஸ்ட்டி பிச்சுமணி ஐயங்கார், ஊராட்சி மன்ற தலைவர் குருநாதன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

What do you think?

மண் சரிவில் சிக்கி உயிருக்கு போராடிய மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்

நாங்குநோி ஸ்ரீ வரமங்கா ஸமேத தெய்வநாயகப்பெருமாள் திருக்கோவிலில் காா்த்திகை உத்திராடம் சிறப்பு கருடசேவை