in

வில்லியனூர் கோகிலாம்பிகை சாமிக்கு 4 கிலோ வெள்ளி அமைச்சர் தேனீ ஜெயக்குமார் வழங்கினார்


Watch – YouTube Click

வில்லியனூர் கோகிலாம்பிகை சாமிக்கு 4 கிலோ வெள்ளி அமைச்சர் தேனீ ஜெயக்குமார் வழங்கினார்

வில்லியனூர் கோகிலாம்பிகை சாமிக்கு வேளாண்துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் 4 கிலோ வெள்ளி கவச உடைகளை கோயில் நிர்வாகத்திடம் வழங்கினார்.

வில்லியனூர் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற கோகிலாம்பிகை உடனுறை திருக்காமீஸ்வரர் கோயில் உள்ளது.

ஆண்டுதோறும் சித்திரை தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இந்நிலையில் இந்தாண்டு தேர் திருவிழா கடந்த வாரம் நடந்தது. திருவிழா நடைபெற்ற அனைத்து நாட்களிலும் கோகிலாம்பிகை மற்றும் திருக்காமீஸ்வரர் வீதி உலா நடந்தது.

இதனிடையே கோகிலாம்பிகை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை நடந்தது. இந்த நிலையில் கோகிலாம்பிகை சாமிக்கு வேளாண்துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் தனது சொந்த செலவில் 4 கிலோ வெள்ளி கவச உடைகளை கோயில் நிர்வாகத்திடம் வழங்கினார்.

இதனை கோயில் சிறப்பு அலுவலர் திருக்காமீஸ்வரன், சிவாச்சாரியார்கள் மற்றும் கோயில் நிர்வாகிகள் பெற்றுக் கொண்டனர்.


Watch – YouTube Click

What do you think?

கீழப்பெரும்பள்ளம் கேது ஸ்தலத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைசாமி தரிசனம்

திருவிடைமருதூர் நண்டு கோவிலில் பாஜக தலைவர் அண்ணாமலை சுவாமி தரிசனம்