in

திட்டக்குடி தொகுதியில் 2000 கணவனை இழந்த தாய்மார்களுக்கு தையல் மிஷின் இயந்திரம் வழங்கிய அமைச்சர்


Watch – YouTube Click

திட்டக்குடி தொகுதியில் 2000 கணவனை இழந்த தாய்மார்களுக்கு தையல் மிஷின் இயந்திரம் வழங்கிய அமைச்சர்

 

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே கழுதூர் தனியார் பள்ளி வளாகத்தில்
2000 கணவனை இழந்த தாய்மார்களுக்கு என்எல்சி இந்தியன் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் சி எஸ் ஆர் நிறுவனம் சார்பில் இலவச மோட்டார் உடன் கூடிய தையல் மிஷின் இயந்திரம் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் அவர்கள் கரங்களாலும், என்எல்சி நிர்வாக இயக்குனர் பிரசன்ன குமார் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி தையல் மிஷினை வழங்கினார்.

இதில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திமுக கடலூர் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் சி.வெ.க. வெங்கடேசன்,என்எல்சி அதிகாரிகள், சி எஸ் ஆர் அதிகாரிகள் ,என்எல்சி ஊழியர்கள், மங்களூர் சேர்மன் சுகுணா சங்கர், திட்டக்குடி சேர்மன் வெண்ணில கோதண்டம், திட்டக்குடி வைஸ் சேர்மன் பரமகுரு, ஒன்றிய செயலாளர்கள் பட்டூர் அமுதலிங்கம், பாவாடை கோவிந்தசாமி, வேல்முருகன், விசிக மேற்கு மாவட்ட செயலாளர் வீர திராவிட மணி, இளைஞர் அணி துணை அமைப்பாளர் பாரதிராஜா, கவுன்சிலர்கள் ,மாவட்ட ஒன்றிய, பேரூர், நகர, கழக நிர்வாகிகள் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

அமைச்சர் பேசுகையில்: தன் மனைவியை நினைத்து குலுங்கி குலுங்கி அழுது அமைச்சர், கஷ்டம் வரும்போது எல்லாம் அவர்கள் மனசு வலிக்கும் போதெல்லாம் இந்த தையல் மெஷின் தான் அவர்களுக்கு ஆறுதலாக இருந்தது. வலி ,கஷ்டம், குடும்ப பாரம் எல்லாம் இந்த தையல் மெஷின் தான் அவர்களுக்கு ஆறுதலாக இருந்தது.

என் மனதில் தோன்றியது திட்டக்குடி தொகுதியில் இருக்கும் கணவனை இழந்த கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் தாய்மார்கள் எல்லோருக்கும் தையல் மெஷின் கொடுக்க வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன்.

அதற்காக தான் 2000 தாய்மார்களுக்கு முதல் கட்டமாக தையல் மிஷின் வழங்கி உள்ளேன் என அமைச்சர் உருக்கமாக உரை நிகழ்த்தினார் .இங்கு வந்திருக்கும் எனது அக்கா, அம்மா, அண்ணி, தங்கைமார்கள் உடன்பிறவா சகோதரனாக இருந்து அவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்வேன் என சொல்லிக் கொண்டு இருந்தபோது குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தார்.

அழுது கொண்டே நான் எப்படி மனைவியை இழந்து கஷ்டப்படுகிறனோ அதேபோல் நீங்களும் உங்கள் கணவன்மார்களை இழந்து கஷ்டப்படக் கூடாது என்பதற்காக முதல் கட்டமாக 2000 தையல் மிஷினை உங்களுக்கு வழங்குகிறேன்.

இன்னும் திட்டக்குடி தொகுதியில் இருக்கும் ஒவ்வொரு கிராமத்தில் இருக்கும் கணவனை இழந்த தாய்மார்கள் எத்தனை பேர் உள்ளார்கள் என்று கணக்கெடுத்து.
என் காட்டை வித்தாவது கொடுப்பேன் என உறுதி கூறினார். இதனால் அப்பகுதியில் பொது மக்களின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது அமைச்சர் என்எல்சி நிர்வாகத்திடம் திட்டக்குடி தொகுதியில் 8000 விதவை தாய்மார்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கும் கூடிய விரைவில் வழங்குமாறு கேட்டு கொண்டார்.


Watch – YouTube Click

What do you think?

இமாச்சல பிரதேச மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ஜெ பி நட்டா ராஜினாமா

எல்லோருக்கும் எல்லாம் என்ற திமுகவின் பொதுக்கூட்டம்