in

ரூ.1 கோடியே 42 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர்

ரூ.1 கோடியே 42 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர்

 

கும்பகோணத்தில்  ரூ.1 கோடியே 42 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் சி.வி. கணேசன், கோவி செழியன் வழங்கினர்….

தஞ்சாவூர் மாவட்டம் தொழிலாளர் நலத்துறை மூலம் மானியத்துடன் கூடிய மகளிர் ஆட்டோ வழங்குதல் மற்றும் தொழிலாளர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி பழைய மாநகராட்சி அலுவலகத்தில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைப்பெற்றது.

இதில் எம். பி. கல்யாண சுந்தரம், முன்னாள் எம்பி ராமலிங்கம் ஆகியோர்
திருச்சி கூடுதல் தொழிலாளர் ஆணையர் திவ்யநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் தொழிலாளர் நலன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி. கணேசன்,
உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் ஆகியோர் கலந்துகொண்டு. 20 பெண்களுக்கு தலா ரூ.1லட்சம் மானியம் மூலம் 20 ஆட்டோக்கள், பணியின் போது உயிரிழந்த நான்கு கட்டிட தொழிலாளர்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதி உதவி, பெண்களுக்கு கல்வி திருமணம் முதியோர் விதவை ஊக்கத்தொகை உள்ளிட்ட ரூ.1கோடியே 42லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்டங்களை வழங்கினர்.

தொடர்ந்து அம்மாபேட்டை மற்றும் பந்தநல்லூர் ஆகிய ஊர்களில் இருந்து சென்னைக்கு இரண்டு பேருந்துகளை அமைச்சர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

மேலும் செய்தியாளர் சந்திப்பில் தொழிலாளர் நலன் மேம்பாட்டு துறை அமைச்சர் சிவி கணேசன் பேசியதாவது…..

கும்பகோணத்தில் முதல் கட்டமாக 20 ஆட்டோக்கள் பெண்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் 35 ஆட்டோக்கள் வழங்கப்பட உள்ளது.

தஞ்சாவூர் வடக்கு மாவட்டத்தில் 100 ஆட்டுக்குள் பெண்களுக்கு மாநிலத்துடன் வழங்கப்படும் எனவும், இந்த நிதியாண்டில் ஆயிரம் பெண் ஆட்டோ தொழிலாளர்களை உருவாக்கி மானியத்துடன் ஆட்டோக்கள் வழங்கப்படும் எனவும், மேலும் தமிழ்நாடு முழுவதும் பெண்களை ஊக்கிவிக்கும் விதமாக மானியத்துடன் கூடிய ஆற்றுக்குள் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் அன்பழகன் துறை சந்திரசேகரன் கும்பகோணம் மேயர் சரவணன் துணை மேயர் தமிழழகன் சமூக நலத்திட்ட தொழிலாளர் உதவி ஆணையர் ஆனந்தன் மற்றும் மாவட்ட, மாநகர பேரூர் கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

What do you think?

மார்கழி மாதத்தையொட்டி, திருவாவடுதுறை ஆதினம் ஐயாரப்பர் ஆலயத்தில் வழிப்பாடு

மாணவர் சங்கம் அரசு கலை கல்லூரி மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்