களிமண் பொம்மை செய்யும் பயிற்சியில் மாணவர்களுடன் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர்
புதுச்சேரி அரசு மற்றும் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த கங்கா பவுண்டேஷன் இணைந்து புதுச்சேரியில் கோடைகாலத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு மாலை நேர சுடு களிமண் சிற்பங்கள் உருவாக்கும் இலவச வகுப்புகளின் தொடக்க நிகழ்வு அரியாங்குப்பத்தில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் மாணவர்களுக்கான மாலை நேர இலவச வகுப்புகளை தொடங்கி வைத்தார். சுமார் 40 நாட்கள் நடைபெறும் இந்த மாலை நேர வகுப்பில் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில் நாள் ஒன்றுக்கு ஒரு பயிற்சிகள் விதம் 40 வகையான பொம்மைகள் செய்வது குறித்து பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.
இந்த வகுப்பில் குதிரை, யானை, சிங்கம் மற்றும் பூக்கள், பறவைகள் உள்ளிட்டவைகளை சுடு களி மண்ணில் உருவாக்குவது எப்படி என்பது குறித்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பத்மஸ்ரீ விருது பெற்ற கைவினை கலைஞர் முனுசாமி மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார்.
பின்னர் மாணவர்கள் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான பொம்மைகளை களிமண்ணால் செய்து அசத்தினர் அப்பொழுது நானும் சலித்தவன் அல்ல என்று சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் மாணவர்கள் மத்தியில் அமர்ந்து களி மண்ணால் பொம்மைகளை செய்து மகிழ்ந்தார் இதில் மாணவர்களும் ஆர்வமுடன் பொம்மைகளையும் செய்து ரசித்தனர்.
அப்பொழுது பேசிய பேசிய சட்டமன்ற உறுப்பினர் இந்த கோடைகால மாலை நேர பயிற்சி வகுப்பு பழைய ஞாபகங்களை கொண்டு வரும் நிகழ்வாக உள்ளது களிமண் கொண்டு பொம்மை செய்வது அதிலும் மாணவர்களுடன் அமர்ந்து பொம்மைகள் செய்வது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று அவர் கூறினார்.