மேலப்பாளையத்தில் மெகா தூய்மை பணியை துவக்கி வைத்த எம் எல் ஏ
திருநெல்வேலி மாநகராட்சியின் தாரக மந்திரமான தூய்மையான நெல்லைக்கான மக்கள் இயக்கம் சார்பில் மெகா கூட்டு துப்புரவு பணி மேலப்பாளையம் மண்டலத்தில் சந்தை ரவுண்டானா அருகில் வைத்து இன்று காலை துவங்கியது
இந்த பணிகளை பாளையங்கோட்டை எம் எல் ஏ அப்துல் வஹாப், துணை மேயர் கே ஆர் ராஜு துவக்கி வைத்தனர், மேலப்பாளையம் மண்டலத்தில் பத்து வார்டுகளில் இந்த பணிகள் துவங்கியது, இந்த பணிகளில் இந்த பணிகளில் 200க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
இவர்கள் சுகாதார சுகாதார சுத்தம் செய்தல் சந்துகளை சுத்தம் செய்தல், கழிவுநீர் ஓடையில் மண் அள்ளுதல் முக்கிய வீதிகளை சுத்தம் செய்தல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் உட்பட பல்வேறு பணிகளில் ஈடுபட்டனர், ஜே.சி.பி இயந்திரம் கனரக வாகனங்கள், காம்பேக்டர் வாகனம், டாட்டா ஏஸ் வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன.
இந்த நிகழ்வில் மேலப்பாளையம் மன்ற தலைவர் கதீஜா இக்லாம் பாசிலா, மேலப்பாளையம் மண்டல உதவி ஆணையர் சந்திரமோகன், நகர் நல அலுவலர் அரசகுமார், சுகாதார அலுவலர் சாகுல் ஹமீது, சுகாதார ஆய்வாளர் சங்கரநாராயணன், ஜானகிராமன், திமுக மேலப்பாளையம் பகுதி செயலாளர் துபாய் சாகுல், மாமன்ற உறுப்பினர்கள் அலி ஷேக் மன்சூர், சபி அமீர் பாத்து, திமுக நிர்வாகிகள் சுடலை கண்ணு, குறிச்சி ஆனந்த்,டி.எஸ்.எம்.ஓ.உஸ்மான், ரஹ்மான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.