வணிக வளாகம் கட்டுவதற்கான பூமி பூஜையை எம்எல்ஏ மாரிமுத்து துவங்கி வைத்தார்
திருத்துறைப்பூண்டி நகராட்சிக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூபாய் 50 லட்சம் வருவாய் ஈட்டும் வகையில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய வணிக வளாகம் கட்டுவதற்கான பூமி பூஜையை எம்எல்ஏ மாரிமுத்து துவங்கி வைத்தார்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சி வார்டு எண் 5 பழைய பேருந்து நிலையம் இருந்த இடம் தினசரி காய்கறி மார்க்கெட் அங்காடியாக இயங்கி வந்தது இந்த ஆண்டு ஜனவரி 5 ம் தேதி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் புதிய பேருந்து நிலையம் அருகில் புதிய காய்கறி மார்க்கெட் ரூபாய் 295.40 லட்சம் மதிப்பீட்டில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்திற்கு 50 கடைகள் கட்டப்பட்டு திறக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது பழைய பேருந்து நிலையமாக செயல்பட்ட இடத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 6கோடியே 9 லட்சம் மதிப்பீட்டில் தரைத்தளத்தில் 21 கடைகள் மற்றும் முதல் தளத்தில் 21 கடைகள் வாகனம் நிறுத்தம் இடம் கழிவறை போன்ற வசதிகளுடன் கூடிய புதிய வணிக வளாகம் கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது நிகழ்ச்சியில் திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ மாரிமுத்து கலந்து கொண்டு பூமி பூஜையை துவங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் நகர் மன்ற தலைவர் கவிதா பாண்டியன் திமுக நகர செயலாளர் ஆர் எஸ் பாண்டியன் கவுன்சிலர்கள் நகராட்சி பொறுப்பு ஆணையர் மற்றும் அலுவலர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.