கூட்டணிக்கு கூப்பிடும்போது மோடிக்கு கெட் அவுட் சொன்ன ஒரே நெஞ்சுரமிக்க தலைவர் சீமான்.நாகை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா பேச்சு
பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தமிழகத்தில் முதற்கட்டமாக வரும் 19ம் தேதி நடைபெறுவதையொட்டி தமிழகம் முழுவதும் கட்சியினர் மற்றும் சுயேட்சைகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் நாகப்பட்டினம் நாடாளுமன்ற வேட்பாளராக போட்டியிடும் கார்த்திகா நன்னிலம் ஆண்டிப்பந்தல் சன்னாநல்லூர் பேரளம் ஆகிய பகுதிகளில் திறந்த வெளி வாகனத்தில் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய நாம் தமிழர் கட்சியின் நாகப்பட்டினம் தொகுதி வேட்பாளர் கார்த்திகா சாராயக் கடையை இழுத்து மூட வேண்டும் என பெண்கள் சொல்றாங்க சாராயத்தை முதலில் கொண்டு வந்தது திமுக தான்.சாராயம் ஆறு போல் ஓடவிட்டது கலைஞர் கருணாநிதி தான். கருணாநிதி என்று சொன்னால் பரம்பரை திமுககாரர்கள் கோபப்படுவார்கள் டாக்டர் கலைஞர் கருணாநிதி என்று தான் சொல்ல வேண்டுமாம்.அடுத்தது டாக்டர் ஜெயலலிதா தான் இவங்களுக்கு பேரு அம்மா வேற .
சீமான் ஆட்சியில் எல்லா டாஸ்மார்க் கடைகளும் மூடப்படும் மதுபான கடைகளில் இழுத்து மூடனும்னு சொன்னா ஆண்கள் வாக்களிக்க மாட்டாங்க எங்களுக்கு தெரியும் உங்கள் வாக்கை விட உங்கள் வாழ்க்கை முக்கியம் உங்கள் மன நிலை முக்கியம்.உங்கள் உடல் நலம் முக்கியம்.மத்திய அரசு தமிழக மக்களுக்கு எதிராக கொண்டுவரும் சட்டங்களுக்கு எல்லாம் எதிர்த்து பேசுவதற்கு திமுக எம்பி களுக்கு தில்லும் திராணியும் கிடையாது நாம் தமிழர் கட்சிகாரர்கள் எங்களை பாருங்கள் இந்திய நிலப்பரப்பிலேயே இந்திய ஒன்றியத்தை ஆளக்கூடிய மோடி அரசாங்கம் மோடியும் அமித்ஷாவும் பார்த்து பயப்படுற கட்சி இந்திய நிலப்பரப்பிலேயே நாம் தமிழர் கட்சி தான் எங்கள் கட்சியை பார்த்து தான் மோடி அஞ்சி நடுங்குகிறார்..
மோடி எங்களை கூட்டணிக்கு கூப்பிட்டார் மோடி கூட கூட்டணி வைக்கிறதுக்கு பதிலா கட்சியை கலைச்சிட்டு போய்விடலாம் என சீமான் சொன்னார்.மோடியை கெட் அவுட் என்று சொல்லிய ஒரே நெஞ்சுரமமிக்க தலைவர் சீமான். அதிமுக கட்சிக்காரங்க மத்தியில் போய் என்ன பேச முடியும்? காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர் என்று எம்ஜிஆர் பாட்ட தான் பேசி இருக்காங்க..
மோடிய எதுக்குனுமுன்னா அதுக்கு கொம்பாதி கொம்பன் வேணும் அவர்தான் சீமான்.. மோடி போடுகின்ற அனைத்து சட்டங்களையும் எதிர்க்கக்கூடிய தெம்பும் திராணியும் உள்ள ஒரே தலைவர் சீமான்.. மோடி புடுங்குற ஆணி எல்லாம் தேவையில்லாத ஆணி தான்.. மோடியை எதுக்கணும்னா காவிரி தண்ணீர் திருவாரூருக்கு நாகப்பட்டினத்திற்கு வரணும்னா அதற்கு இந்த கார்த்திகா டெல்லிக்கு போகணும் அப்பதான் காவேரி தண்ணிர் இங்கே வரும் என பேசினார்.இந்த பிரச்சாரத்தில் நாகை மண்டல செயலாளர் அகஸ்டின் அற்புதராஜ் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.