in

400 இடங்களில் பாஜக வெல்லும் என மோடி நகைச்சுவை செய்கிறார் செயலாளர் முத்தரசன் கலாய்ப்பு


Watch – YouTube Click

400 இடங்களில் பாஜக வெல்லும் என மோடி நகைச்சுவை செய்கிறார் செயலாளர் முத்தரசன் கலாய்ப்பு

 

நானும் ரவுடிதான் என்று வடிவேலு நகைச்சுவை செய்வதை போல, 400 இடங்களில் பாஜக வெல்லும் என மோடி நகைச்சுவை செய்கிறார் – சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் கலாய்ப்பு.

வடிவேலுவை போல பிரதமர் மோடி காமெடி செய்து கொண்டிருக்கிறார் என திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் பேசும் போது…

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தான் ஒரு நாட்டினுடைய பிரதமர் என்கிற நிலையிலிருந்து செயல்படாமல் தான் ஒரு ஆர்எஸ்எஸ் பிரதிநிதி என்பதை வெளிப்படுத்தக் கூடிய வகையில் மிகவும் தரம் தாழ்ந்த பிரச்சாரங்களை மேற்கொண்டார், அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய பிரச்சாரத்தையும் மேற்கொண்டார்.

நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு திமுக இருக்காது, திரினாமுல் காங்கிரஸ் இருக்காது, காங்கிரசை அழித்தொழியுங்கள் என்று பேசினார்.

நாங்கள் ஆட்சிக்கு வரவில்லை என்றால் இராமர் குடிசை வீட்டில் தான் இருப்பார், நாங்கள் இப்பொழுது அவரை கோபுரத்தில் வைத்து அழகு பார்க்கிறோம். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ராமர் கோவிலை இடித்து விடுவார்கள் என்று அபாண்டமான ஒரு குற்றச்சாட்டுகளை சொன்னார்.

இட ஒதுக்கீட்டுக்கு எதிராக இருக்கிற மோடி, இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் இட ஒதுக்கீட்டை ரத்து செய்து விடுவார்கள், அரசியல் சட்டத்தை மாற்றுவார்கள் என்று தான் செய்கிற தவறுகளை எல்லாம் எதிர்க்கட்சிகள் செய்வதாக செய்வதாக, இந்தியா கூட்டணி செய்வதாக குற்றம் சாட்டினார்.

கடைசியில் நான் மனிதன் அல்ல. கடவுளால் அனுப்பப்பட்ட பிரதிநிதி என்று தன்னையே கடவுள் ஆக்கிக் கொண்டார்.

ராமரை கடவுள் என்று குறிப்பிட்டு வந்தவர் தற்பொழுது தன்னையே ஒரு கடவுளின் அவதாரம் என தன்னை கடவுளாக ஆக்கி பிரச்சாரம் செய்தார்.

இப்படி ஒரு தரம் தாழ்ந்த பிரச்சாரத்தை இந்தியாவில் இதுவரையில் எந்த பிரதமரும் மேற்கொண்டதில்லை. இது பற்றி எல்லாம் தேர்தல் ஆணையத்திற்கு பல புகார்கள் தெரிவிக்கப்பட்டது. நேரடியாக கொடுக்கப்பட்டது. அதன் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.

கடைசியாக தேர்தல் நடக்க இருக்கிற நிலையில் விவேகானந்தர் பாறையில் தியானம் மேற்கொள்கிறார். இவர் உண்மையிலேயே தியானம் மேற்கொள்கிறார் என்று சொன்னால், அது யாருக்கும் தெரியாமல் நடக்க வேண்டும். ஆனால் அதற்கு மாறாக அவர் கோவிலுக்கு செல்வது, வணங்குவது, பூஜை செய்வது, அனைத்தும் தொலைக்காட்சிகளிலும், செய்தித்தாள்களிலும் மிகப்பெரிய செய்திகளாக தலைப்பு செய்திகளாக வருகிறது.

அப்படியானால் தியானம் மேற்கொள்வதின் நோக்கம் என்ன..? இப்படி ஒரு பிரச்சாரத்தை அதாவது மக்களுக்கு இருக்கிற அந்த கடவுள் நம்பிக்கை, மத நம்பிக்கை இவைகளை தனக்கு சாதகமாக பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு, ஒரு தேர்தல் பிரச்சாரத்தை தியானத்தின் மூலமாக மேற்கொள்கிறார். இப்படிப்பட்ட தவறான நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டிய தேர்தல் ஆணையம் கண்ணை கட்டிக் கொண்டிருப்பது வியப்பாக இருக்கிறது, வேதனை அளிக்கிறது.

நமது நாட்டின் ஜனநாயகம் என்னாகுமோ என்கிற கவலையை அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இத்தகைய பிரதமரின் நடவடிக்கை மிக மிக வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதனை கண்டுகொள்ளாமல், காது பொத்து கொண்டு இருக்கிற தேர்தல் ஆணையம் பொறுப்பற்ற முறையில் இருக்கிறது. மக்கள் அதன் மீது வைத்திருக்க நம்பிக்கை இழக்க கூடிய வகையில் செயல்படுகிறது.

காந்தியை பற்றி பிரதமர் பேசியிருப்பது ஏதோ தெரியாமல் பேசவில்லை .வேண்டுமென்றே காந்தியை கொச்சைப்படுத்துவது, காந்தியை இழிவு படுத்துவது, கொலை செய்த பிறகும் கூட அவருடைய திருநாமம் நாட்டில் இருக்கக் கூடாது என்கிற உள்நோக்கத்தோடு செய்யக்கூடிய பிரச்சாரமாகும்.

கோட்சே தான் மிக சிறந்த தேச பக்தன் என ஆர் எஸ் எஸ் பேசிக் கொண்டிருக்கிறது காந்தியை சுட்டுக் கொன்றவன் மிக சிறந்த தேச பக்தன் என்று குறிப்பிட்டு பேசினார்கள். இப்பொழுது காந்தியை இழிவு படுத்த கூடிய வகையில், இப்படம் வந்த பிறகுதான் அவரை பற்றி தெரியும் என்று பிரதமர் பேசுகிறார். இத்தகைய இழிவான பேச்சுக்கள் அவர் நாட்டினுடைய பிரதமர் என்பதை முற்றிலுமாக மறந்துவிட்டார் என்பது மட்டுமல்ல ஆர்எஸ்எஸ் உண்மையான பிரதிநிதியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

ஆர் எஸ் எஸ் இயக்கம் என்பது நாட்டை அழிக்கக்கூடிய ஒரு பேரழிவை ஏற்படுத்தக்கூடிய இயக்கம். அந்த இயக்கத்தின் பிரதிநிதியாக அவர் உரையாற்றிக் கொண்டிருக்கிறார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏப்ரல் மாதத்திலிருந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது தேர்தல் பிரச்சாரத்தில் எந்த ஒரு இடத்திலும் பிரதமர் நரேந்திர மோடி, தான் தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறேன் என்று எங்கேயும் சொல்லவில்லை. இந்த இந்த சாதனைகளை நிறைவேற்றி இருக்கிறேன் என எங்கேயும் சொல்லவில்லை. சொல்ல முடியாது. ஏனெனில் அவர் எதையும் நிறைவேற்றவில்லை. அதனால் சொல்லவில்லை.

நிச்சயமாக நம்முடைய நாட்டு மக்கள் பாரத ஜனதா கட்சி மீண்டும் அதிகாரத்தில் அமர வைக்க மாட்டார்கள். பாஜக ஆட்சியில் விவசாயிகள் துன்பப்பட்டு இருக்கிறார்கள், தொழிலாளர்கள் துன்பப்பட்டு இருக்கிறார்கள், அனைவரும் ஒட்டுமொத்தமாக நாட்டு மக்கள் அனைவரும் துன்பப்பட்டு இருக்கிறார்கள். மோடிக்கு வேண்டிய ஒரு சில அதானி அம்பானி போன்றவர்கள் பயன்பெற்று இருக்கிறார்கள். மக்கள் பயன்பெறவில்லை. பத்தாண்டு கால ஆட்சியில் துன்பத்தை அனுபவித்த மக்கள் மீண்டும் பாரத ஜனதா கட்சியை அல்லது மோடியை ஒருபோதும் பிரதமர் ஆக்க மாட்டார்கள்.

ஒரு திரைப்படத்தில், நகைச்சுவை நடிகர் வடிவேலு நானும் ரவுடிதான், நானும் ரவுடிதான் என்று சொல்வதைப்போல, இங்கே பிரதமர் நாங்கள் 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால் எதார்த்தத்தில் நடக்கப்போவதில்லை என்றார்.


Watch – YouTube Click

What do you think?

மளிகை கடையில் தீ விபத்துஎம் எல் ஏ ராஜன் செல்லப்பா நேரில் ஆய்வு

ராமேஸ்வரம் அருகே வில்லுண்டி தீர்த்த கிணறு தடுப்புகள் சேதம்