in

கத்தார் பிரதமருடன் மோடி சந்திப்பு


Watch – YouTube Click

கத்தார் பிரதமருடன் மோடி சந்திப்பு

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான பணிகள் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், அரசுமுறை பயணமாக நேற்று முன்தினம் தனி விமானம் மூலம் ஐக்கிய அமீரகம் சென்ற பிரதமர் மோடிக்கு, அந்நாட்டு அதிபர் சிறப்பான வரவேற்ப்பை கொடுத்து, ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது.

பின்னர், இருநாட்டு தலைவர்கள் சந்திப்பின்போது பல்வேறு ஒப்பந்தங்கள் போடப்பட்டது. இதன்பின், அபுதாபியில் ‘அஹ்லன்’ மோடி என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது, இந்தியாவிற்கும், ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கும் இடையிலான உறவுகள் குறித்து பேசிய பிரதமர் மோடி, துபாயில் புதிய சிபிஎஸ்இ அலுவலகம் விரைவில் நிறுவப்படும் என அறிவித்தார். மேலும், ரூபே கார்டு மற்றும் யுபிஐ சேவை குறித்தும் பேசினார். இதையடுத்து, உலக அரசுகள் உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது, குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச நிர்வாகம் என்பதே எனது மிகப்பெரிய கொள்கையாகும் என்றார். இதனைத்தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் இந்து கோயிலை பிரதமர் மோடி திறந்து வைத்தார். 27 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் இந்த கோவிலுக்கு கடந்த 2015ம் ஆண்டு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, நேற்று அபுதாபியில் கட்டப்பட்டுள்ள சுவாமி நாராயண் ஹிந்து கோவிலைத் திறந்து வைத்து பிரார்த்தனை செய்தார்.

இந்த நிலையில், ஐக்கிய அமீரகம் பயணத்தை முடித்துக்கொண்டு, கத்தார் தலைநகர் தோஹாவுக்கு சென்றுள்ள பிரதமர் மோடிக்கு, அந்நாட்டு பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தானி பிரமாண்ட வரவேற்பு அளித்தார். பின்னர் இருநாட்டு தலைவர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இந்தியா மற்றும் கத்தார் இடையேயான உறவை வலுப்படுத்துவது குறித்து இருவரும் பேசியதாக கூறப்படுகிறது.


Watch – YouTube Click

What do you think?

பல் உடைத்த விவகாரத்தில் பல்வீர்சிங்கை பாதுகாக்கும் நபர்கள் யார்?

கடலுக்கு அடியில் 60 அடி ஆழத்தில் கதைச்சுருக்கத்தை எழுதி வெளியிட்டு சாதனை