ஈரானின் புதிய அதிபராகிறார் முஹம்மது முக்பர்
ஈரானின் புதிய அதிபராக துணை ஜனாதிபதி முகமது முக்பர் பதவியேற்க உள்ளார் என தகவல் வெளியகியுள்ளது.
மூடுபனி காரணமாக ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, பெரிய கேள்வி என்னவென்றால் ஈரானின் அடுத்த ஜனாதிபதி யார் என்பதுதான்.
ஒரு தகவலின்படி, ஈரானின் துணை ஜனாதிபதி முஹம்மது முக்பர், புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அந்நாட்டு அரசியலமைப்பின்படி 50 நாள்களுக்குள் புதிய அதிபரை தேர்தெடுக்க வேண்டும். இதனால், முஹம்மது முக்பரின் பெயர் அதிபர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதிய ஜனாதிபதி முறைப்படி தேர்ந்தெடுக்கப்படும் வரை, தற்காலிக ஜனாதிபதி பதவியை முஹம்மது முக்பர் ஏற்பார் என கூறப்படுகிறது.