செஞ்சி நகர திமுக சார்பில் செஞ்சி பேரூராட்சியில் கோடை வெயிலை முன்னிட்டு அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் திறந்து வைத்தார்..
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி நகர திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா.
தமிழ்நாட்டில் நிலவும் கோடை வெயிலை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் திமுக நிர்வாகிகள் நீர் மோர் பந்தல் அமைத்து பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
அந்த வகையில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவர்களின் வழிகாட்டுதலின்படி விழுப்புரம் வடக்கு மாவட்டம் செஞ்சி பேரூராட்சி திருவண்ணாமலை சாலை இந்தியன் வங்கி எதிரிலும், திண்டிவனம் சாலை மார்க்கெட் கமிட்டி எதிரிலும், செஞ்சிஅன்னை அஞ்சுகம் அம்மாள் புதிய பேருந்து நிலையம் எதிரிலும்,காந்தி பஜார் செல்வ விநாயகர் கோவில் அருகில் செஞ்சி நகர திமுக சார்பில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
செஞ்சி நகர செயலாளர் கார்த்திக் தலைமையில்,
பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள் ஜான் பாஷா, லட்சுமி வெங்கடேசன், சுமித்ரா சங்கர், வார்டு செயலாளர் ஜி.டி. தனசேகரன் ஆகியோர் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு தர்பூசணி பழங்கள், இளநீர், வெள்ளரிப்பிஞ்சு நீர்மோர் ஆகியவற்றை வழங்கினார்.
பின்னர் செஞ்சி அன்னை அஞ்சுகம் அம்மாள் புதிய பேருந்து நிலையத்தில் கடும் கோடை வெயிலில் அவதிப்பட்டு வரும் பொதுமக்கள் நலன் கருதி செஞ்சி பேரூராட்சி சார்பில் அமைக்கப்பட்டிருந்த ஓஆர்எஸ் கரைசலை பொது மக்களுக்கு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, பொதுக்குழு உறுப்பினர் மணிவண்ணன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ராஜலட்சுமி செயல்மணி,திமுக நிர்வாகிகள் காளி சுப்ரமணியன், ரசூல் பாஷா, சிவக்குமார்,நூர்ஜகான் ஜாபர், சங்கர், தொண்டரணி பாஷா பாலகிருஷ்ணன், பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.