in

மழலை மொழியில் மழைக்கால விழிப்புணர்வு

மழலை மொழியில் மழைக்கால விழிப்புணர்வு

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த எல்கேஜி மாணவியின் மழைக்கால விழிப்புணர்வு வீடியோ வைரல்…..

திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையம் சேவியர்காலனி பகுதியைச் சேர்ந்த ஆனந்த் புஷ்பராஜ், ஞானசெல்வி ஜாஸ்மின் தம்பதியின் மகள் இவானா ஆலிவ். எல்கேஜி மாணவியான இவர், மழைக்கால விழிப்புணர்வு தொடர்பாக வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், மழைக்காலம் மிகவும் அருமையானது. ஆனால், அதில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சுத்தமான குடிநீரைப் பருக வேண்டும். ஆரோக்கியமான உணவு சாப்பிட வேண்டும். கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். சுவிட்ஜ்களை தொடக்கூடாது. குடைகள் மற்றும் மழைக்கோட்களைப் பயன்படுத்த வேண்டும் என்று மழலை மொழியில் பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

What do you think?

திருவிடைமருதூரில் நடை பயிற்சி சென்ற பெண்ணை கீழே தள்ளி 9 பவுன் தாலி செயின்கள் பறிப்பு

மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு நீடிப்பதால் 8-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை