in

பிரம்மாண்ட செட்டுடன் தொடங்கிய மூக்குத்தி அம்மன் 2 பூஜை

பிரம்மாண்ட செட்டுடன் தொடங்கிய மூக்குத்தி அம்மன் 2 பூஜை

ஆர் ஜே பாலாஜியின் இயக்கத்தில் வெளியான மூக்குத்தி அம்மன் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தற்பொழுது மூக்குத்தி அம்மன் 2 படத்தினை சுந்தர் சி இயக்குகிறார்.

இப்படத்தில் மீண்டும் நயன்தாரா நடிக்க, வேல் ஸ்கிரீன் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஹிப்ஹாப் இசை அமைக்கிறார். சுமார் 100 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் மூக்குத்தி அம்மன் 2 படபிடிப்பு இன்று பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.

இப்படத்தின் பூஜைக்கே பிரம்மாண்டமாக செட் போட்டு அசத்தி இருக்கிறார் சுந்தர்.C . ஐசரி கணேஷின் குலதெய்வத்தின் பெயரும் மூக்குத்தி அம்மன் அதனால் அந்த பெயரிலேயே படத்தை உருவாக்குவதில் மகிழ்ச்சி என்றார்.

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அம்மன் படம் உருவாகிறது. முதல் பாகத்தில் நடிக்கும் போது நயன்தாரா விரதம் இருந்து படத்தை அழகாக முடித்துக் கொடுத்தார்.

தற்பொழுதும் இந்த படம் துவங்குவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பே தனது குழந்தைகளுடன் விரதத்தை தொடங்கி இருக்கிறார் நயன்தாரா என்று கூறினார்.

இப்படத்தில் ரெஜினா, இனியா, மைனா நந்தினி, யோகி பாபு சிங்கம்புலி, விச்சு, என ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடிக்க வில்லனாக கன்னட நடிகர் துனியா விஜய் நடிக்க உள்ளார்.

ஏற்கனவே அருண் விஜய் இப்படத்தில் வில்லனாக நடிப்பதாக பேச்சுக்கள் அடிபட்டது கேட்ட சம்பளம் கிடைக்காததால் இப்படத்தில் இருந்து விலகி விட்டார்.

What do you think?

ஓடிடி…. யில் ரிலீஸ் ஆகும் டெஸ்ட்

எளிகையாக நடந்த NS பொன்குமார் திருமணம்