in

புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு 10 லட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம்

புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு 10 லட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் .

நினைத்தாலே முக்தி தரக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருத்தலத்தில் புரட்டாசி மாத பௌர்ணமியை ஒட்டி சுமார் 10 லட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் செய்தார்கள்.

இன்று காலை 11:27 மணிக்கு தொடங்கிய பௌர்ணமி கிரிவலம் நாளை காலை 9 10 மணி வரை பௌர்ணமி திதி இருக்கும் நிலையில் இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றார்கள்.

லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் முன்பு 16 கால் மண்டபத்தின் எதிரே தொடங்கி 14 கிலோமீட்டர் சுற்றளவு உள்ள கிரிவலப் பாதையில் இந்திரலிங்கம் அக்னி லிங்கம் எமலிங்கம் நிறுதி லிங்கம்
வருண லிங்கம் ஆதி அருணாச்சலேசுவரர் திருக்கோயில் வாயு லிங்கம் குபேர லிங்கம் ஈசானிய லிங்கம் உள்ளிட்ட அஸ்டலிங்கங்களையும் தரிசித்து கிரிவலம் வந்தார்கள்.

விடுமுறை தினமான இன்று பௌர்ணமி , புரட்டாசி மாதப் பிறப்பு, செவ்வாய்க்கிழமை கிரிவலம் வந்தால் பிறவிக் கடன் தீரும் என்பது ஐதீகம் இந்நிலையில் இன்று காலை முதல் கிரிவலம் வரத் தொடங்கிய பக்தர்கள் இன்று மாலை வேளையில் தமிழ்நாடு ஆந்திரா கர்நாடகா தெலுங்கானா மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளி மாநில வெளிநாட்டு பக்தர்கள் என சுமார் 10 லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் அண்ணாமலையார் அரோகரா என கோஷத்துடன் கிரிவலம் வந்தார்கள்

What do you think?

புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் கிரிவலம்

பிரிட்டன் தமிழ் ஐரோப்பிய செய்திகள் (18.09.2024) | Britain Tamil Europe News | UK News | London News