in

நாகையில் 100க்கு மேற்பட்ட குடிநீர் இணைப்புகளை அதிரடியாக துண்டித்தனர்

நாகையில் 100க்கு மேற்பட்ட குடிநீர் இணைப்புகளை அதிரடியாக துண்டித்தனர்

 

நாகையில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட மெயின் குழாயிலிருந்து முறைகேடாக வழங்கப்பட்ட 100க்கு மேற்பட்ட குடிநீர் இணைப்புகளை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அதிரடியாக துண்டித்தனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகலில் இருந்து கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் மூலம் நாகப்பட்டினம் நகரம், ஒன்றியம், வேளாங்கண்ணி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் நிரப்பப்பட்டு, நகராட்சி, ஊராட்சி, பேரூராட்சி நிர்வாகங்கள் மூலம் குடியிருப்புகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட மெயின் குழாயிலிருந்து முறைகேடாக குடிநீர் விநியோகிக்கப்படுவதாக குடிநீர் வடிகால் வாரியத்துக்கு தகவல் வந்தது.

அதன் பேரில் குடிநீர் வடிகால் வாரிய உதவி பொறியாளர் தியாகராஜன் தலைமையில் அதிகாரிகள் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வில் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள ஆண்டோ சிட்டி நகரை சுற்றி சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு அதேபோல அங்குள்ள தனியார் கல்லூரிக்கும் முறைகேடாக குடிநீர் விநியோகிக்கப்பட்டது தெரிய வந்தது அதனைத் தொடர்ந்து அந்த இணைப்புகளையும் குடிநீர் வடிகால்வாரிய அதிகாரிகள் துண்டித்து நடவடிக்கை எடுத்தனர்.

What do you think?

சம்பா சாகுபடிக்காக தஞ்சை கல்லணையிலிருந்து வினாடிக்கு 3400 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது

மதுரை மாநகராட்சி மாமன்ற கூட்டம் மதுரை மேயர் இந்திராணி தலைமையில் தொடங்கியது