பல்வேறு கட்சிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் தேமுகதிகவில் இணைந்தனர்
தேசிய முற்போக்கு திராவிட கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவுறுத்தலின்படி தமிழகம் முழுவதும் தேமுதிக வளர்ச்சிக்காக பல்வேறு வகைகளில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குறிப்பாக கேப்டன் விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு மாற்றுக்கட்சியை சேர்ந்தவர்கள் தேமுதிகவில் இணைய விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தஞ்சை வடக்கு மாவட்ட தேமுதிக சார்பில் மாவட்ட செயலாளர் சுகுமார் தலைமையில் திருவிடைமருதூர் அருகே திருமங்கலக்குடி தேமுதிக மாவட்ட அலுவலகத்தில் மாற்றுக்கட்சியை சேர்ந்தவர்கள் தேமுதிகவில் இணையும் விழா நடந்தது.
தஞ்சை வடக்கு மாவட்ட தேமுதிக செயலாளர் சுகுமார் தலைமையில் நடந்த இவ்விழாவில் திமுக, அதிமுக, உள்ளிட்ட பல்வேறு மாற்றுக்கட்சியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் திருவுருவப்படத்திற்கு மலர்கள் தூவி அவருக்கு புகழஞ்சலி செலுத்தி தேமுதிகவில் இணைந்தனர்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதியில் மாற்றுக்கட்சியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் தேமுதிகவில் இணைந்ததால் தேர்தல் களத்தை சந்திக்க தேமுதிக பல்வேறு வியூகங்களுடன் களம் இறங்கியுள்ளது.
தொடர்ந்து தேமுதிகவில் இணைந்தவர்களுக்கு தேமுதிக துண்டு அணிவிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது.