ஆர்டிஓ அலுவலகம் மற்றும் காரை முற்றுகையிட்டு 100க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம்
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் ஆர்டிஓ ஷாலினி காரை முற்றுகையிட்டு தமிழநாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் முற்றுகை இடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து., கடந்த 20ஆம் தேதியன்று மதுரை மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் ஷாலினி 27 கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிட மாறுதல் உத்தரவு பிறப்பித்தார். இந்த பணியிட மாறுதல் உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் பணிகளைப் புறக்கணித்துள்ளோம்.
எங்களது கோரிக்கைகளை ஏற்கும் வரை போராட்டத்தில் ஈடுபடுவோம்., பேச்சுவார்த்தையில் எவ்வித சமரசமும் வெட்டப்படாமல் இருந்தால் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும்.
இதனால் பொதுமக்கள் பணிகள் முடக்கப்படும் எங்களைப் போராட்ட தூண்டுவது ஆர்டிஓ தான் என்றும், முதல்வரின் கூறியதன் பேரில் அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தின் மூலம் நத்தம் மற்றும் ஆட்சேபன இல்லா புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகளின் எண்ணிக்கை கணக்கெடுப்பு பணி முடங்கும் அபாயம் உள்ளதாக தெரிவித்தனர்.