in

மயிலாடுதுறையில் இருந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு 1000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பாதயாத்திரை

மயிலாடுதுறையில் இருந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு 1000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பாதயாத்திரை

 

மயிலாடுதுறையில் இருந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு 1000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பாதயாத்திரை. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள பம்பை உடுக்க வாத்தியம் முழுங்க 25 ஆம் ஆண்டு பாதயாத்திரை தொடங்கியது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து ஆண்டுதோறும் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் மாலை அணிந்து பாதயாத்திரையாக செல்வது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு ஸ்ரீ சமயபுரம் பாதயாத்திரை குழுவினர் சார்பில் 25 ஆம் ஆண்டாக பக்தர்கள் பாதயாத்திரையாக புறப்பட்டு சென்றனர்.

முன்னதாக உலகப் புகழ் பெற்ற மயிலாடுதுறை காவரி துலா கட்டத்தில் அமைந்துள்ள ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் ஒன்றிணைந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

அதனை தொடர்ந்து வாகனத்தில் சமயபுரத்தம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள சக்தி கரகம் மற்றும் மாலை அணிந்து மஞ்சள் உடை உடுத்தி விரதம் இருந்த பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 1000 க்கும் மேற்பட்ட பக்தர்கள், பச்சைக்காளி பவளக்காளி ஆட்டத்துடன் பம்பை, உடுக்க வாத்தியங்கள் முழங்க பாதயாத்திரை புறப்பாடு சென்றனர்.

What do you think?

ரசிகை…யின்னா இப்படி இருக்கனும்… கொடுத்து வைத்த நடிகர்

TVK தலைவர் விஜய்…க்கு ‘ஒய்’ பாதுகாப்பு