in

திருவாரூரில் தமிழ்நாடு முதலமைச்சர் உறுதிமொழி வாசிக்க 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்

திருவாரூரில் தமிழ்நாடு முதலமைச்சர் உறுதிமொழி வாசிக்க 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்

 

“போதை பொருள் அற்ற தமிழ்நாடு” என்ற நோக்கத்தை எட்டுவதற்காக இன்று ஒரு கோடி மாணவர்கள் பங்கேற்கும் பெருந்திரள் போதை பொருள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திருவாரூரில் வடபாதிமங்கலம் சோமசுந்தரம் ஆண்கள் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியில் 1000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் உறுதி மொழியை வாசிக்க பள்ளி மாணவர்கள் திரும்ப வாசித்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ, நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், திருவாரூர் நகர மன்ற தலைவர் புவனப்பிரியா செந்தில், நகர மன்ற துணைத் தலைவர் அகிலா சந்திரசேகர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.

What do you think?

நாக சைதன்யா…வுடன் சேர்ந்து வாழ நினைத்தேன்… ஆனால் இப்படி ஆகிவிட்டது….Samantha

திருத்துறைப்பூண்டியில் கல்லூரி மாணவர்கள் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி