in

சாலை வசதி கோரி 150-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு


Watch – YouTube Click

சாலை வசதி கோரி 150-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு

 

நத்தம் அருகே மலையூருக்கு சாலை வசதி கோரி 150-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் குட்டுப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பெரிய மலையூர், சின்ன மலையூர், பள்ளத்துக்காடு, வலசை உள்ளிட்ட பகுதிகளில் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். 1800 வாக்காளர்கள் உள்ளனர்.

100 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் இவர்கள் தரை மட்டத்தில் இருந்து 9 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இந்த ஊர்களுக்கு இதுவரை சாலை வசதி, மருத்துவ வசதி மற்றும் பட்டாக்கள் வழங்க இதுவரை அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்தும் இது குறித்து அரசு கண்டு கொள்ளவில்லை என்பதால் உடனடியாக சாலை வசதி மருத்துவ வசதி மற்றும் பட்டாக்கள் வழங்க கோரி 150-க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் சிறுவர் சிறுமிகள் உள்ளிட்டவர்கள் திண்டுக்கல் நத்தம் தேசிய நெடுஞ்சாலையில் சேர் வீடு பிரிவு அருகே சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் பிரதான சாலையான இச்சாலை வழியே செல்ல வேண்டிய அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அனைத்தும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வந்தனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் திண்டுக்கல் ரூரல் டி.எஸ்.பி.உதயகுமார், நத்தம் தாசில்தார் உள்ளிட்ட போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தைக்கு பின்னர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.


Watch – YouTube Click

What do you think?

நிலத்தை அபகரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் புகார்

பேருந்துகளில் ஜாதிய பாடல்களை ஒலிக்க செய்தால் நடத்துனர்கள் மற்றும் ஓட்டுநர்கள் மீது வழக்கு