மரக்காணம் பகுதியில் 190 கோடி மதிப்பிலான தடுப்பணை கட்டும் பணி முடிவடைந்தும், மணல் மேடுகள் அமைக்காததால் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ள நீர் புகும் அபாயம் உள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்துள்ள கந்தாடு பகுதியில் சுமார் 190 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணிக்கு 2019ஆம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது.
இந்நிலையில் அந்த பணியானது கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது வரை நடைபெற்று வந்தது இந்த நிலையில் இந்த பணி முழுவதுமாக முடிவடைந்து விட்டது இருப்பினும் இந்த கழுவேளி பகுதியில் சுமார் 15 கிலோ மீட்டருக்கு இருபுறமும் மணல்மேடுகள் அமைக்க வேண்டும்.
இந்த 15 கிலோமீட்டரில் இரண்டு கிலோமீட்டர் வருவாய் துறைக்கு சொந்தமான இடமாகும் மீதமுள்ள 13 கிலோமீட்டர் வனத்துறைக்கு சொந்தமான இடமாகும்.எனவே வருவாய் துறைக்கு சொந்தமான இரண்டு கிலோமீட்டர் அளவிற்கு மட்டுமே மணல்மேடுகள் அமைக்கப்பட்டுள்ளது மீதமுள்ள 13 கிலோமீட்டர் வனத்துறைக்கு சொந்தமான இடங்களில் மணல்மேடுகள் அமைப்பதற்கு வனத்துறையினர் ஒத்துழைப்பு அளிக்காததால் தடுப்பணையை சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ள நீர் புகும் அபாயம் உள்ளது அதுமட்டுமின்றி அந்த கிராமங்களில் இருக்கும் விவசாய நிலங்கள் முற்றிலுமாக பாதிப்படையும் இதனால் உடனடியாக மீதமுள்ள பகுதியில் மணல்மேடுகள் அமைக்க வேண்டும் என அப்பகுதியில் உள்ள மக்களின் கோரிக்கையாக உள்ளது.
மேலும் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு இன்னும் ஓரிரு மாதங்கள் உள்ளதால் தடுப்பணையின் நீர்மட்டம் உயர்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. எனவே எனவே உடனடியாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் விரைந்து மணல்மேடுகள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்தால் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள மக்களை காப்பாற்றலாம் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.