எருதுவிடும் விழாவில் 200 க்கும் மேற்பட்ட காளைகள்
செங்கம் அருகே நடைபெற்ற எருதுவிடும் விழா பல்வேறு மாவட்டங்களில் இருந்து 200 க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டு சீறிபாய்ந்தது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தீதாண்டப்பட்டு ஊராட்சியில் எருது விடும் விழா நடத்தப்பட்டு வருகிறது. இரண்டு சுற்றுகளாக நடத்தப்படும் எருது விடும் விழாவில் சுமார் 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று ஓடின.
தீதாண்டப்பட்டு பகுதியில் நடைபெற்ற எருது விடும் விழாவில் திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுமார் 200 க்கும் மேற்பட்ட காளை கலந்து கொண்டு 100 மீட்டர் தூரம் கொண்ட இலக்கை குறைந்த வினாடியில் கடக்கும் காளைகளுக்கு முதல் பரிசாக 1 லட்சம் ரூபாயும் இரண்டாம் பரிசாக 75 ஆயிரம் ரூபாயும் மூன்றாம் பரிசாக 50 ஆயிரம் ரூபாயும் நான்காம் பரிசாக 40, ஆயிரம் ரூபாய் என போட்டியில் வெற்றி பெரும் 51 காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
இந்த எருது விடும் விழாவை காண செங்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு எருது விடும் விழாவை கண்டு களித்து வருகின்றனர்.
எருது விடும் விழாவில் காளைகளை அடக்க தழுவ முயன்ற இளைஞர்களை எருது முட்டியதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்து அருகில் உள்ள சுகாதார மையத்தில் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.