in

சென்னை மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து 300க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு 300க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விமான நிலையங்களில் உள்ளது போல் மெட்டல் டிடக்கர் சோதனைக்கு பின்னரே மருத்துவமனைகளில் நோயாளிகள் அனுமதிக்கப்பட வேண்டும், அரசு மருத்துவமனைகளுக்கு தனி பாதுகாப்பு பிரிவு உள்ளிட்ட கோரிக்கையும் முன் வைத்துள்ளனர்.

சென்னை கிண்டி அரசு மருத்துவ மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி நோயாளியின் மகனால் கத்தியால் குத்தப்பட்டு தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டார் இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி இந்திய மருத்துவர் சங்கம் தமிழ்நாடு அரசு மருத்துவ சங்கம் என பல்வேறு மருத்துவர் சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது இந்த நிலையில் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு 300-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் மருத்துவர் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் மேலும் அவசரகால சிகிச்சைகள் தவிர்த்து அனைத்து சிகிச்சைகளையும் புறக்கணித்து மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விமான நிலையங்களில் உள்ளது போல் மீட்டர் டிடெக்டர் சோதனைக்கு பின்னரே நோயாளி கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும் மருத்துவமனைகளில் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு 24 மணி நேரம் காவல்துறை கண்காணிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும் மருத்துவ மனை பாதுகாவலர்களை அதிகரிக்க வேண்டும் மருத்துவமனைகளுக்கு என தனி பாதுகாப்பு பிரிவை ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்கள் எழுப்பினர்.

What do you think?

தஞ்சை திருவிடைமருதூர் அருகே சாத்தனூரில் திருமந்திரம் அருளிய திருமூலர் கோயிலில் திருமூலநாயனார் குருபூஜை அபிஷேக ஆராதனை

அழகர் கோவிலில் தைலக்காப்பு உற்சவம்..