in

கீழ்வேளூரில் பயணிகள் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுப்பட்ட 300 க்கும் மேற்பட்டோர் கைது

காவிரி டெல்டா பாசனம் மற்றும் குடிநீருக்கும் தண்ணீர் விட மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும் மத்திய அரசு தண்ணீர் திறக்க வலியுறுத்தியும் கீழ்வேளூரில் பயணிகள் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுப்பட்ட 300 க்கும் மேற்பட்டோர் கைது

காவிரியில் தண்ணீர் திறந்துவிட மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து இன்று டெல்டா மாவட்டங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளில் அங்கம் வகிக்கும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள் சார்பில் இன்று பல்வேறு இடங்களில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம் நடைப்பெற்றது. திருச்சியில் இருந்து காரைக்காலுக்கு சென்ற பயணிகள் ரயிலை தடுத்து நிறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

கர்நாடாக அணையில் 250 டி.எம்.சி தண்ணீர் இருந்தும் தமிழகத்திற்கு 1 டி.எம்.சி தண்ணீர் கூட திறந்து விட மறுக்கும் கர்நாடாக அரசை கண்டித்தும், இதற்கு ஆதரவு தெரிவித்து அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசு தண்ணீர் திறந்து விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தமிழக அரசு அனைத்து கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்களை கூட்டி பேசி உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர். இதில் ஆண்கள் பெண்கள் என 300 க்கும் மேற்பட்ட விவசாய சங்கத்தினரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். ரயில் மறியல் போராட்டத்தை முன்னிட்டு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் தலைமையில் ரயில்வே காவல்துறையினர் உட்பட 100 க்கும் மேற்பட்ட போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கீழ்வேளூர் ரயில்வே கேட்டின் முன்பு ரயில் நின்றதால் கீழ்வேளூர் கச்சனம் சாலை அரை மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

What do you think?

இராஜபாளையத்தில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் கணக்கில் வராத பணம் மீட்கப்பட்டது…

திருத்துறைப்பூண்டியில் கர்நாடக அரசை கண்டித்து 300 மேற்பட்டோர் ரயில் மறியல் போராட்டம்