நாகை அருகே பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட தாய், மகளுக்கு நீதி கேட்டு ஆட்சியர் அலுவலகத்திற்கு 300 க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு வந்து ஆட்சியரிடம் மனு அளித்தனர்; உரிய நிதி வழங்கவில்லை என்றால் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுப்பட உள்ளதாக எச்சரிக்கை
பேட்டி; திருமலை செந்தில், மாவட்ட செயலாளர், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே தெற்குப்பொய்கைநல்லூரில் கணவரை இழந்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணும், 16 வயது மதிக்கத்தக்க மகளும் தனியாக வசித்து வந்த நிலையில் கடந்த 18 ம் தேதி நள்ளிரவு பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளான் அப்போது மகள் தப்பி ஓடிய நிலையில் தாயை விரலை கடித்து துண்டித்தும் சத்தம் போடாமல் இருக்க வாயில் மண்ணைக் கொட்டியும் பல்வேறு இடங்களில் காயப்படுத்தியும் சித்திரவதை செய்து அருகில் உள்ள கொள்ளைக் புரத்தில் தூக்கி வீசி சென்றுள்ளான் இந்த நிலையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு கருவேலங் கடை அருகே புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மேட்டை சேர்ந்த 28 வயதான முத்துக்குமார் என்பவனை பிடித்து தப்பி ஓடிய போது கீழே விழுந்து கை காலில் முறிவு ஏற்பட்டு ஒரத்தூர் மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இந்த சம்பவம் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்திற்கு பெண்கள் அமைப்பு உள்பட பல்வேறு அமைப்பினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட காம கொடூரனுக்கு அதிக பட்ச தண்டனை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று பரவை வர்த்தகர் சங்கம் சார்பில் அனைத்து கடைகளையும் அடைத்து போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
வணிகர்கள் மற்றும் கிராம மக்கள் இந்த கொடூர சம்பவத்தை கண்டித்தும் , பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கேட்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியருக்கு திரண்டு வந்த 300 க்கும் மேற்பட்ட பெண்கள், வணிகர்கள் திரண்டு வந்து பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு 1 கோடி ரூபாய் நிதி வழங்க வேண்டும், பாதிக்கப்ட்ட சிறுமியை படிப்பு செலவை ஏற்றும் , அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வணிகர் சங்கத்தினர் சம்பவம் நடந்து இத்தனை நாள் ஆகியும் அரசு சார்பில் ஒருவர் கூட பாதிக்கப்பட்டவர்களை பார்க்கவில்லை என்று குற்றம் சாட்டியவர் இந்த படுபாதக சம்பவத்தில் உரிய நடவடிக்கையும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய நிதி வழங்கவில்லை என்றால் தமிழகம் முழுவதும் கடைகளை அடைத்து போராட்டம் செய்ய உள்ளதாக எச்சரிக்கை விடுத்தனர்