in

பழனி கிரிவலப் பாதையில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் வள்ளி கும்மி நடனம் ஆடி வழிபாடு


Watch – YouTube Click

பழனி கிரிவலப் பாதையில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் வள்ளி கும்மி நடனம் ஆடி வழிபாடு

 

பழனி பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பழனி கிரிவலப் பாதையில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் வள்ளி கும்மி நடனம் ஆடி வழிபாடு செய்தது பக்தர்களை வெகுவாக கவர்ந்தது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி திருவிழாவினன்குடி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பங்குனி திரு விழா தொடங்கியதை எடுத்து முதல் நாளான இன்று கரூரை சேர்ந்த பக்தர்கள் குழுவினர் பழனியில் சாமி தரிசனம் செய்ய வருகை தந்தனர்.

பழனி அடிவாரம் கிரிவலப்பாதையில் வலம் வந்த கரூரை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் ஒரே மாதிரியான சேலை கட்டி வள்ளிக்கும்மி நடனமாடிய படியே கிரிவலம் சென்றனர்.

அப்போது முருகன் பக்தி பாடல்கள் பாடியபடியே நடனமாடியது பக்தர்கள் அனைவரையும் கவர்ந்தது.


Watch – YouTube Click

What do you think?

ஓய்வு பெற்ற முன்னாள் ஐஜி சந்திரன் பாஜகவில் இணைந்தார்

புதுச்சேரியில் இருந்து இருடியம் கடத்தப்படுவதாக குற்றச்சாட்டு