in

ஆதிலிங்கேஸ்வர்ர் ஆலையத்திற்கு 50க்கும் மேற்பட்ட சிலைகள் பூஜைகள் செய்யபட்டு கொண்டு செல்லப்பட்டது

ஆதிலிங்கேஸ்வர்ர் ஆலையத்திற்கு 50க்கும் மேற்பட்ட சிலைகள் பூஜைகள் செய்யபட்டு கொண்டு செல்லப்பட்டது

 

பழனியில் இருந்து சிறுமலை அமையவுள்ள ஒரே கல்லில் 11 அடியில் சிவன் சிலையை ஆதிலிங்கேஸ்வர்ர் ஆலையத்திற்கு 50க்கும் மேற்பட்ட சிலைகள் பூஜைகள் செய்யபட்டு கொண்டு செல்லப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் அஞ்சுகுழிபட்டி அருகே சிறுமலை அடிவாரம் ,திருஞான மலையில் 2 ஏக்கர் அளவில் அமையவுள்ள ஆதிலிங்கேஸ்வர்ர், அகிலாண்ட ஈஸ்வரி கோவில் அமைப்பதற்கான பணி 15 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

இதற்கான சிலைகள் மாசி மாதம் 14 ம் தேதி மஹாசிவராத்திரி அன்று நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

இதற்காக 11 அடியில் சிவன் சிலையும், 8 அடியில் அகிலாண்ட ஈஸ்வரி சிலை, ஐம்பூத சக்தி கணபதி சிலை, செவ்வாய், சனீஸ்வர்ர், புதன், ராகு, கேது, சுக்கிரன், சந்திரன், சூரியன், குரு உள்ளிட்ட நவகிரகங்கள் சிலைகளை ஓரே கல்லில் ஆன சிலைகள் பழனியில் உள்ள சிவா சிற்ப கலைகூடத்தில் சிற்ப கலைஞர் சிவநேசன் சுவாமி சிலைகளை நேர்த்தியாக வடிவமைத்தார்.

இந்நிலையில் ஆதிலிங்கேஸ்வரர் கோவில் தலைமை பூசாரி தமிழ்செல்வன் தலைமையில் ஊர் மக்கள் சுவாமி சிலைகளை பூஜைகள் செய்து வாகனங்களில் எடுத்து சென்று மகாசிவராத்திரி அன்று பிரதிஸ்டை செய்யப்படுகிறது.

What do you think?

நாமக்கல் ஸ்ரீ மஹாவாராஹி அம்மன் ஆலயத்தில் மார்கழிமாத வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்

குற்றாலம் குற்றாலநாதர் குழல்வாய் மொழியம்மை திருகோவில் திருவாதிரை திருவிழா கொடியேற்றம்