திருவண்ணாமலை உள்விளையாட்டு அரங்கில் 4வது மாவட்ட அளவிலான கராத்தே போட்டியில் 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு – போட்டியில் வெற்றி பெறுவார் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவர்.
திருவண்ணாமலை உள் விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவிலான 4வது கராத்தே போட்டியில் திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு, வந்தவாசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த 600 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
இந்த கராத்தே போட்டியானது சப் ஜூனியர் (6 – 13), கேடட் (14, 15 ), ஜூனியர் (16, 17), அண்டர் 21 (18 – 20) மற்றும் சீனியர் (18 வயது மேற்பட்டோர்) என்ற ஐந்து பிரிவின் கீழ் நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறும் மாணவ மாணவிகள் ஜனவரி மாதம் சென்னையில் நடைபெறக்கூடிய மாநில அளவிலான கராத்தே போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
மாவட்ட அளவில் ஆன கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கராத்தே அசோசியேசனின் மாவட்டத் தலைவர் நியூட்டன் கலந்து கொண்டு பதக்கமும் பாராட்டு சான்றிதழும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் செயலாளர் வேலு, பொருளாளர் சிவகுமார், ரெஃப்ரி கமிஷன் சேர்மன் வேக நாகராஜன் உடன் இருந்தனர்.