தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டிற்கு நாகை மாவட்டத்தில் இருந்து 270 வேன், பஸ், கார்களில் 7000த்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் விக்கிரவாண்டிக்கு படையெடுப்பு; இன்றுதான் தங்களுக்கு தீபாவளி என உற்சாக முழக்கம்
கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி துவங்கப்பட்ட தமிழக வெற்றி கழகத்தின் முதல் அரசியல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வி.சாலை என்ற கிராமத்தில் இன்று பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் படையெடுத்து வருகின்றனர்.
அதன்படி நாகை மாவட்டத்திலிருந்து 230 க்கும் வேன், 10 பஸ், 30 க்கும் மேற்பட்ட இளைஞர்கள், பெண்கள் 7000 க்கும் மேற்பட்டோர் மாநாட்டில் பங்கேற்க புறப்பட்டனர். தவெக நாகை மாவட்ட செயலாளர் சுகுமார் தலைமையில் , நாகை வேதாரண்யம், தலைஞாயிறு, கீழ்வேளூர், திருக்குவளை, திருமருகல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நாகை வந்து ஆரவாரத்துடன் விக்கிரவாண்டி புறப்பட்டுள்ளனர். முன்னதாக கோவிலில் பிரார்த்தனை செய்தும் தேங்காய் உடைத்தும் பட்டாசு வெடித்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.