in

நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் சாலை மறியல் போராட்டம்

நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் சாலை மறியல் போராட்டம்

 

நெல்லை மாவட்ட வழக்கறிஞர் சரவணராஜ் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், அவரது குடும்பத்திற்கு அரசு வேலை மற்றும் ஒரு இழப்பீடு வழங்க வேண்டும் மத்திய மாநில அரசுகள் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் எனக் கூறி மாவட்ட நீதிமன்ற முன்பாக நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள புளியங்குளத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சரவணன்ராஜ். இவர் நெல்லை அருகே உள்ள ஆரோக்கியநாதபுரத்தில் சென்னையில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் இடப் பிரச்சனை சம்பந்தமாக வழக்குகள் நடத்தி வருகிறார். அந்த இடத்திற்கு பென்சிங் போடும் பணி நடந்து வருகிறது. சென்னையில் உள்ள இந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் போலி பத்திரங்கள் மூலம் எங்களுடைய நிலத்தை அபகரித்து விட்டதாக ஆரோக்கிய நாதபுரம் கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதற்கு முன்பு போராட்டமும் நடைபெற்றிருக்கிறது. இந்த நிலையில் ஆரோக்கிய நாதபுரத்தைச் சேர்ந்த செல்வம் என்பவருடைய நிலத்தில் பொக்லைன் இயந்திரம் மூலம் நிலம் சமன்படுத்தும் வேலை நடந்து வந்தது அப்பொழுது செல்வம் என்பவர் வழக்கறிஞர் சரவண ராஜனிடம் என்னுடைய இடத்தில் எப்படி கல் ஊன்றலாம் என்று கேட்டிருக்கிறார்.

இதனை எடுத்து நடந்த வாக்குவாதத்தில் செல்வம், வழக்கறிஞர் சரவண ராஜனை அரிவாளால் வெட்டி இருக்கிறார் , இதில் படுகாயம் அடைந்த சரவணராஜ் பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது பற்றி பெருமாள்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் வழக்கறிஞர் சரவணராஜ் கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும் அவரது மனைவிக்கு அரசு வேலை மற்றும் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கூறி 200 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் திருநெல்வேலி – திருச்செந்தூர் செல்லும் பிரதான சாலையில் மாவட்ட நீதிமன்ற முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்களிடம் காவல்துறை துணை ஆணையர் கீதா பேச்சுவார்த்தை நடத்தினார் . தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் வட்டாட்சியர் சரவணன் வழக்கறிஞர் பேச்சுவார்த்தை நடத்தி மாவட்ட ஆட்சியரிடம் இது குறித்து தெரிவித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறினார். வட்டாட்சியர் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.

இந்த நிலையில் வழக்கறிஞர் சரவணராஜ் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக செல்வம் உட்பட மூன்று பேரை காவல்துறையினர் முதற்கட்டமாக கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள செல்வம் தமிழக மக்கள் முன்னேற்ற கழக கட்சியின் நிறுவனர் ஜான் பாண்டியனின் கார் ஓட்டுனராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

What do you think?

திருநெல்வேலி ஸ்ரீ குரு ராகவேந்த்ராின் 353 வது ஆராதனை விழா எராளமான பக்தா்கள் தாிசனம்

பிரிட்டன் தமிழ் ஐரோப்பிய செய்திகள் (22.08.2024) | Britain Tamil Europe News | UK News | London News