தேரழுந்தூர் அன்னை ஆயிஷா சித்தீக்கா ரளி அன்ஹா பெண்கள் அரபிக் கல்லூரி முப்பெரும் விழா நடைபெற்றது
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா தேரழுந்தூர் அன்னை ஆயிஷா சித்தீக்கா ரளி அன்ஹா பெண்கள் அரபிக் கல்லூரி பத்தாம் ஆண்டு ஆலிமா பட்டமளிப்பு விழா பதினோராம் ஆண்டு முபல்லிகா பட்டமளிப்பு விழா பதிமூன்றாம் ஆண்டு நிறைவு விழா மற்றும் முப்பெரும் விழா ஜாமிஆ பள்ளிவாசல் வளாகத்தில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு நாட்டாண்மை பஞ்சாயத்தார்கள் தலைமை வகித்தனர். ஈஏஐ சங்கம், ஜமாஅத்தார்கள் மற்றும் இளைஞர்கள் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக ரைஸ் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் வழக்கறிஞர் இராஜாராமன் கலந்துகொண்டு மாணவிகள் இடத்தில் உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில் நன்கு படித்து நல்ல மதிப்பெண் எடுத்தால் போதாது அரசு பணிகளுக்கு செல்ல வேண்டும் என்று கூறினார். பின்னர் விழாவில் நான்கு ஆண்டுகள் நிறைவு செய்த 1 மாணவிக்கு ஆலிமா சித்தீக்கிய்யா பட்டமும், அதனைத் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் நிறைவு செய்த 11 மாணவிகளுக்கு முபல்லிகா சித்தீக்கிய்யா பட்டமும் ஊர் நாட்டாண்மை பஞ்சாயத்தார்கள் மாணவிகளுக்கு வழங்கினர். இவ்விழாவில் ஊர் ஜமாத்தார்கள் ஆண்கள் பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.