in

சாலை விபத்தில் இறந்த மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்த தாய்

சாலை விபத்தில் இறந்த மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்த தாய்

 

நாகை அருகே சாலை விபத்தில் இறந்த மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்த தாய்; 7 பேருக்கு வாழ்வு கொடுத்த இளைஞரின் உடலுக்கு ஆட்சியர் ஆகாஷ் நேரில் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செய்து அஞ்சலி.

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த பிரதாபராம்புரத்தை சேர்ந்தவர் மனோகரன். இவரது மகன் வீரபாலன. 23 வயதான இவர் எலெக்டிசியன் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த 23 ம் தேதி வீரபாலன் இருச்சக்கர வாகனத்தில் சென்ற போது நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயமடைந்து ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த 26 ம் தேதி அவர் மூளைச்சாவு அடைந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து தாய் சித்ரா தனது மகனின் உடல் உறுப்புகளை தானமாக வழங்குவதாக தெரிவித்தார்.

இதயம், கல்லீரல், கண்கள், தோல், கிட்னி என அவரது உடல் உறுப்புகள் தானமாக எடுத்துக் கொள்ளப்பட்டது. இதனையடுத்து இறுதி சடங்கிற்காக அவரது உடலை சொந்த ஊரான பிரதாபராம்புரத்தில் எடுத்து வந்தனர். அவரது உலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தும் விதமாக நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்து அஞ்சலி செலுத்தினர்.

நாகை அருகே சாலை விபத்தில் மரணமடைந்த மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ள தாயின் செயல் சோகத்தின் மத்தியிலும் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

What do you think?

எல்லையை தாண்டி மீன்பிடித்தாதாக கூறி படகை நோக்கி இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு

வேளாங்கண்ணியில் சாலை சீரமைக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு