in

மகன் கண் முன்னே தனியார் பஸ் மோதி தாய் உடல் நசுங்கி சாவு – இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபரீதம்

மகன் கண் முன்னே தனியார் பஸ் மோதி தாய் உடல் நசுங்கி சாவு – இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபரீதம்

திருச்சியை அடுத்த சோமரசம்பேட்டை அதவத்தூர் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் இவரது மனைவி கண்ணம்மா (வயது 80).இவர்களது மகன் கோவிந்தராஜ். இவர் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.இந்த நிலையில் இருவரும் வீட்டில் இருந்து இரு சக்கர வாகனத்தில் மெயின் கார்டு கேட் நோக்கி சென்றனர்.

இருசக்கர வாகனத்தை மகன் கோவிந்தராஜ் ஓட்டி செல்ல பின்இருக்கையில் தாய் கண்ணம்மா அமர்ந்திருந்தார். இன்று காலை 11.30 மணியளவில் கோவிந்தராஜ் இருசக்கர வாகனத்தில் பிஎஸ்என்எல் அலுவலக சாலையை கடந்து மேலப்புதூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது இவரை பின் தொடர்ந்து ஜங்ஷனில் இருந்து சத்திரம் பேருந்து நிலையம் நோக்கி தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது அந்த தனியார் பஸ் திடீரென்று இருசக்கர வாகனத்தின் வலது புறத்தில் சைடு போட்டு செல்லும் போது எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த கோவிந்தராஜ், கண்ணம்மா இருவரும் நிலைத்தடுமாறி சாலையில் விழுந்தனர்.

அப்பொழுது பின் சீட்டில் அமர்ந்திருந்த கண்ணம்மா தூக்கி எறியப்பட்டு தனியார் பஸ்சின் பின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.இந்த விபத்தில் மகன் கோவிந்தராஜ் காயத்துடன் உயிர்த்தப்பினர். தன் கண் முன்னே தாய் உயிரிழந்தால் கோவிந்தராஜ் கதறி அழுதார், அங்கிருந்தவர்கள் அவரை அருகில் இருந்த மரத்தடியில் அமர வைத்திருந்தனர்.

இந்த விபத்து சம்பவம் குறித்து தகவல் இருந்து கண்டோன்மென்ட் தெற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.பிறகு பஸ் சக்கரத்தில் சிக்கி இறந்த கண்ணம்மாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் குறித்து கண்டோன்மென்ட்
தெற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மகன் கண் முன்னே தாய் பஸ் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி இறந்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

What do you think?

முசிறி நகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

ஐரோப்பா செய்திகள் | Europe News Tamil – 08.11.2024