மழையால் பள்ளமான சாலை அச்சத்தில் வாகன ஓட்டிகள் உறக்கத்தில் நெடுஞ்சாலைத்துறை
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள சரஸ்வதி நகர் பகுதியில் உள்ள மேம்பாலத்தின் கீழ் வாகனங்கள் திரும்பும் இடத்தில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால் சாலை உள்வாங்கி பள்ளம் ஏற்பட்டு வாகனங்கள் கவிழ்ந்து விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனை நெடுஞ்சாலை துறையோ கண்டுகொள்ளவில்லை உறக்கத்தில் உள்ளது என வாகன ஓட்டிகள் வேதனை தெரிவித்ததோடு பெரும் அசம்பாவிதங்கள் நடப்பதற்கு முன்பு உடனடியாக மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு பள்ளத்தை சரி செய்ய வேண்டுமென வாகன ஓட்டிகளும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.