in

ரேக்ளா பந்தயத்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதி


Watch – YouTube Click

ரேக்ளா பந்தயத்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதி

 

பழனி அருகே கோவிலுக்கு வந்தவர்கள் அனுமதியின்றி ரேக்ளா பந்தயத்தால் பழனி – உடுமலை சாலையில் எதிரே வந்த வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் சித்திரை மாதத்தின் கடைசி 7நாட்களும், வைகாசி மாதத்தின் முதல் 7நாட்கள் என 14நாட்கள் கிரிவலம் சென்று வழிபடுவது வழக்கம். இதன்படி இன்று வைகாசி மாதம் ஏழாம் நாளான கடைசி கிரிவலத்தை முன்னிட்டு பழனி, உடுமலை உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட ரேக்ளா வண்டியில் பழனி கோவிலுக்கு கிரிவலம் சென்றனர்.

கிரிவலம் சென்று வழிபாடு முடித்து விட்டு மீண்டும் ஊர்களுக்கு திரும்பினர். அப்போது பழனி-உடுமலை நெடுஞ்சாலையில் உள்ள ஆர். வாடிப்பட்டி அருகே ரேக்ளா வண்டிகள் சென்றபோது அவர்களுக்குள் திடீரென பந்தயம் நடத்தினர்.

திடீரென நடத்தப்பட்ட ரேக்ளா பந்தயத்தால் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். எதிரே வரும் வாகனங்களை கருத்தில் கொள்ளாமல் அதிவேகமாக மாட்டு வண்டிகளை அடித்து விரட்டி ஓட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பழனி கோவிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்புவது தவறல்ல. ஆனால் போட்டி போட்டு பந்தயம் நடத்தும் வகையில் வேகமாக செல்வது தவறு என்று எச்சரித்தனர். வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறைகளிடம் உரிய அனுமதியின்றி ரேக்ளா பந்தயம் நடத்தியது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தியதை தொடர்ந்து சாலையில் அனைவரும் கலைந்து சென்றனர்.

எவ்வித முன்னெச்சரிக்கை பணிகளும் மேற்கொள்ளாமல் பழனி-உடுமலை சாலையில் வாகனங்கள் சென்றுவரும் நிலையில் கோவலுக்கு வந்த பக்தர்கள் ரேக்ளா பந்தயம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Watch – YouTube Click

What do you think?

கொடைக்கானலில் தொடர்ந்து பெய்த மழையால் நீடித்த காட்டாற்று வெள்ளம்..

போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாயும்