புதுச்சேரியில் தி கோட் திரைப்படம் திரையிடப்பட்டது..ரசிகர்கள் உற்சாக வரவேற்பு…
விஜய் நடித்த தி கோட் திரைப்படம் புதுச்சேரியில் உள்ள ஒட்டுமொத்த திரையரங்குகளில் இன்று வெளியாகி உள்ளது.
கோரிமேடு சாலையில் உள்ள முருகா திரையரங்குகளில் காலை 9 மணிக்கு முதல் காட்சி வெளியானது. ஒரு மணிக்கு முன்னதாக வந்த ரசிகர்கள் பெருமளவில் கூடி காத்திருந்து திரையரங்கத்தில் உள்ள மகிழ்ச்சியோடு சென்றனர்.
தவெக கட்சியின் கொடியை எடுத்து வந்து ரசிகர்கள் உயர பிடித்து மகிழ்ந்தனர். படத்தின் எழுத்து துவங்கியது முதல் விஜய்யை காண்பிக்கும் வரை ரசிகர்கள் உற்சாகத்துடன் விசில் அடித்து படத்தை வரவேற்றனர்.
அதிவேகமாக செல்லும் ரயிலில் விஜயகாந்த் முகத்தில் இருந்து விஜய் முகம் வரும் வரை ரசிகர்கள் இருக்கையில் உட்காராமல் உற்சாகத்துடன் எழுந்து விசில் அடித்து கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
இதேபோல் காமராஜர் சாலையில் உள்ள பாலாஜி திரையரங்கில் காலை 10 மணிக்கு காட்சி திரையிடப்பட்டதால் ரசிகர்கள் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக வெளியே காத்திருந்து படம் பார்க்க சென்றனர்.
முன்னதாக இவர்கள் மேளதாளத்துடன் விஜய்யின் உருவப்படத்தை கொண்டு வந்து தியேட்டர் முன் வைத்து நடனம் ஆடி மகிழ்ந்தனர். ஊர்வலத்தில் தவெக கட்சியின் கொடியை எடுத்து வந்து ரசிகர்கள் உயர்த்திப் பிடித்து விஜய் வாழ்க என கோஷமிட்டனர்.