பாஜக விற்கு சவால் விட்ட MP கனிமொழி பூஜ்ஜியத்தை காட்டி துரத்த வேண்டும்
இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில், தமிழ்நாடு முதலமைச்சரின் 71 வது பிறந்தநாள், தமிழக அரசின் 3 ஆண்டு சாதனை நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம், தஞ்சை மத்திய மாவட்ட மாநகரதிமுக சார்பில் தஞ்சையில் இன்று நடைபெற்றது…
மத்திய மாவட்ட திமுக செயலாளர் துரை.சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், சிறப்புரையாற்றிய திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி…..
விவசாயிகளுக்கு எந்த உதவியும் செய்யாமல், கோரிக்கைகளுக்காக போராடுகின்ற விவசாயிகளை கண்ணீர் புகை குண்டு, இரும்பு வேலி உள்ளிட்டவைகளை கொண்டு அடக்குமுறையிலா ஈடுபடும் பாஜக அரசு, 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஒதுக்கப்படும் நிதியை குறைத்துக் கொண்டே இருப்பதும் அந்த வகையில் இத்திட்டத்தில் தமிழ்நாட்டிற்க்கு மட்டும் 400 கோடி ரூபாய் நிலைமையில் ஒன்றிய அரசு வைத்திருப்பதாக சுட்டி காட்டிய திருமதி.கனிமொழி, . தமிழ்நாடட்டு பிள்ளைகள் படித்து விட்டு வேலை இல்லாமல் இருக்கக்கூடாது என்பதற்க்காக தான் , பயிற்ச்சி அளித்து வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுத்துக்கொண்டு உள்ளார் நமது முதல்வர் என்றவர், தமிழ்நாட்டின் உரிமைகளை ஒன்றிய பாஜக அரசின் , பிரதமரின் காலடியில் வைத்து தொழுதுவிட்டு வந்தவர்கள் அதிமுக வினர் என்றவர், இந்த மாநிலத்தின் உரிமைகள், மன்னின் கலாச்சாரம், மொழி, பண்பாடு, அனைத்தையும் காத்து நிற்க்கும் கூடிய அரசு திராவிட அரசு என்றார்..
இந்த தேர்தலில் வெற்றி பெறுவோம் என சொல்லிக்கொண்டு திரியும் நிலையில், அவர்களுக்கு சொல்லிக்கொள்வோம் , பெரியார், அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் மண்ணில் மத அரசியலுக்கு இடமில்லை, தமிழ் துரோகிகளுக்கு இடமில்லை, என்று பூஜ்ஜியத்தை காட்டி துரத்தி அடிக்க வேண்டிய தேர்தல் என்பதை நினைவில் கொண்டு, வெறும் வெற்றிக்கான தேர்தல் மட்டுமல்ல, நம்முடைய எதிர்காலம், பெண்களின் எதிர்காலம், இந்த நாட்டின் அமைதியை பாதுகாக்க வேண்டிய தேர்தல் என்பதை என்பதையும் அதறாகான கடமை நமக்கு உள்ளது என்பதனை மனதில் வைத்து 40க்கு 40 வெற்றி, ஒரு இடம் கூட வேறு யாருக்கும் இல்லை என்கின்ற வகையில் உழைத்து, வெற்றியை முதல்வரின் கரங்களில் ஒப்படைகாக வேண்டும் என்றார்…
இக்கூட்டத்தில் தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம், மாநகர செயலாளர் மேயர் சண்.இராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாநில மகளிர் அணி துணைத்தலைவர் திருமதி. கார்ல் மார்க்ஸ், மாவடுட ஊராட்சி குழு தலைவர் உஷாபுண்ணியமூர்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் இராமச்சந்திரன், செல்வம், மாவட்ட அவைத்தலைவர் இறைவன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்…