எம்பி உமா குமரனின் கணவர் திடிரென்று பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார்
ஜூலை 4, அன்று நடைபெற்ற இங்கிலாந்தின் பொதுத் தேர்தலில் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த பிரித்தானியத் தமிழர் உமா குமரன், ஸ்ட்ராட்ஃபோர்ட் மற்றும் போவின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தொழிலாளர் எம்பி உமா குமரன் முதல் நாள் காமன்ஸ்..இல் பங்கேற்ற போது அவரது கணவர் திடிரென்று பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார்.
அவரின் கணவருக்கு வயது 39 ஆரோக்கியமாக” இருக்கும் தனது கணவர் பக்கவாதத்தால் பாதிக்கப்படுவார் என்று தான் “எதிர்பார்க்கவில்லை” என்று கூறிய அவர், மக்கள் எச்சரிக்கையுடனும் விழிப்புடன் இருக்குமாறு வலியுறுத்தினார்.
தனது கணவரின் எதிர்பாராத உடல்நலப் பிரச்சினை காரணமாக மருத்துவமனை கண்காணிப்பில் இருக்கும் அவரை பார்த்துகொள்ளும் பொறுப்பு இருப்பதால் “ பணியை மேற்கொள் தாமதம் ஏற்படுவதால் தயவுசெய்து பொறுத்துக் கொள்ளுங்கள்” என்று தொகுதி மக்களிடம் கேட்டு கொண்டார்.