திரு.R.S. பாரதி அவர்கள் கடலூரில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு
கடலூரில் இன்று திமுக மூத்த வழக்கறிஞரும் மற்றும் கழக அமைப்பு செயலாளருமான ஆர் எஸ் பாரதி அவர்கள் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.
இதில் R.S பாரதி அவர்கள் கூறுகையில் இந்தியாவிலேயே அதிக அளவு போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட இடம் குஜராத் மாநிலம் என்றும் என்றும் குந்ரா என்று சொல்லப்படும் port இல் தான் அதிக அளவு போதை பொருட்கள்
கைப்பற்றப்பட்டன.
அதே போல் அதிமுக ஆட்சியில் குட்கா கடத்தலில் காவல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் மீது சிபிஜ வழக்கு பதிவு செய்த நிலையில் அப்போது எடப்பாடி அவர்கள் நடவடிக்கை எடுத்தாரா என்றும் கேள்வி எழுப்பினர்.
மேலும் எடப்பாடிஅவர்கள் ஐடி மாணவர்களை போதைப் பொருள் கடத்தல் என பேசியதை திமுக வன்மையாக கண்டிப்பதாகவும் எடப்பாடி அவர்கள் இரு நாட்களுக்குள் இது சம்பந்தமாக பயங்கர மன்னிப்பு கேட்கவில்லை அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று திமுக கழக அமைப்பு செயலாளா R.S பாரதி கூறினார்.
திமுகவைபொறுத்தவரையில் தவறு செய்வார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த ஆட்சியில் நன்றாக நடைபெறுவதை ஒட்டி இத்தகைய பேச்சுக்களால் திசை திருப்புவதாகவும் குற்றச்சாட்டினார்.
தேர்தல் அறிக்கை வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்ட பிறகு வெளியிடப்படும் என்றும் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர் பிரிவினரும் மற்றும் கடலூர் மாநகராட்சி கழக செயலாளர் கே எஸ் ராஜா அவர்களும் உடன் இருந்தனர்.